Tamil viral news leopard : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அமைந்திருக்கும் பாப்பாங்குளம் பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்று புகுந்தது. சோள காட்டில் பதுங்கியிருந்த அந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இருக்கும் மனிதர்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறையினர் அந்த புலியை நேற்று திருப்பூர் அம்மாபாளையம் அருகே உள்ள பழைய பனியன் கம்பெனி அருகே சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
Advertisment
இந்த நிகழ்வை காண பொதுமக்கள் கூட்டமாக வந்தது வனத்துறையினர் அவர்களின் வேலையில் பெரும் சிரமத்தை கொடுத்தது என்றே கூறலாம். வனத்துறையினர் சிறுத்தைப் புலியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது, கட்டிடத்தின் மேலே நின்று கொண்டிருந்த இரண்டு வனத்துறையினரை தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவ்விருவரும் பெரிய அளவில் காயங்கள் ஏதும் இன்றி தப்பினர். வனத்துறையினரின் இந்த தன்னலமற்ற செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த சிறுத்தையைப் பிடிக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு பகுதியில் சுற்றித்திரிந்த இந்த சிறுத்தைப் புலி தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பிடிக்கப்பட்ட சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் விடுவது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil