Advertisment

எவ்வ்வ்வ்ளோ பெரிய போனு! மாத்திரைன்னு நெனச்சுட்டீங்களா சார்?

6 மாதத்திற்கு முன்பு ஸ்மார்ட்போனை வாயில் போட்டு விழுங்கிய நபருக்கு ஆப்பரேசன் செய்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் மருத்துவர்கள்

author-image
WebDesk
New Update
viral news, trending viral news,

எகிப்து நாட்டில் வயிறு வலி காரணமாக அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ஒரு நபர். மிகவும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதாக அவர் கூறியிருந்தார். அதனால் அவருக்கு உடனே எக்ஸ்ரே மற்றும் சி.டி.ஸ்கேன் சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்தனர் மருத்துவர்கள்.

Advertisment

விரைந்து சோதனைகளை முடித்துவிட்டு முடிவுகளை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. ஒரு மர்மமான பொருள் ஒன்று அவருடைய வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. சிறிதும் யோசிக்காமல் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இரண்டு மணி நேர நீண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த மனிதர் முழுங்கிய செல்போன் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அந்த நபர் ஏன் அவ்வாறு போனை முழுங்கினார் என்பது தெரியவில்லை என்று கூறிய மருத்துவர்கள் இது ஒரு அதிர்ச்சியான சம்பவம் என்று கூறியுள்ளனர். இந்த செய்தியை படிக்கும் போது எங்களுக்கும் கூட அப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தால் இந்த நிகழ்வு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்.

தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment