தங்களின் குழந்தைகளை எப்படி பெற்றோர்கள் பூங்காவிற்கு அழைத்துச் சென்று விளையாட வைத்து மகிழ்கின்றார்களோ அப்படியே இங்கே ஒரு கரடி தன்னுடைய குட்டியை அழைத்து வந்து பார்க் ஒன்றில் சறுக்கி விளையாடியுள்ளது. மேலும் எப்படி சறுக்க வேண்டும் என்று தன்னுடைய குட்டிக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் நெட்டிசன்களை நெகிழ வைத்திருக்கிறது.
வடக்கு கரோலினாவில் அமைந்திருக்கும் ஐசாக் டிக்சன் ஆரம்ப பள்ளி பூங்கா காட்டை ஒட்டி அமைந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் அந்த பக்கம் வந்த கரடி ஒன்று தன்னுடைய குட்டியையும் அழைத்து வந்து சறுக்கி விளையாடும் காட்சிகளை பதிவு செய்துள்ளார் அங்கு பணியாற்றும் பெட்சி எம்ரி.
முதலில் அம்மா கரடி படிக்கட்டுகளில் ஏறி சறுக்க ஆரம்பிக்கிறது. அம்மாவை பிடித்துக் கொள்ள மேலே ஏறும் குட்டி கரடி, அம்மா சறுக்கியவுடன் சற்று நிதானித்து சறுக்க துவங்குகிறது. அப்போது எப்படி சறுக்க வேண்டும் என்று கீழே இருந்து அம்மா கரடி குட்டிக்கு சொல்லித் தரும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil