Tamil Viral Video: சமீபத்தில் WildLense Eco Foundation வெளியிட்ட புகைப்படம் ஒன்று, சோஷியல் மீடியா அன்பர்களை நாக்குத் தள்ள வைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு அருமையான சூழலில், யானைகள் சைஸ் வாரியாக வரிசையாக நின்று கொண்டு தண்ணீர் அருந்துகின்றன. படம் நல்லா இருக்கே என்று அதையே ஒரு நிமிடத்திற்கு மேல் உற்றுப் பார்த்தவர்களுக்கு நெற்றி சுருங்க, கண்கள் கூர்மையாக, அப்படியே கைவிரல் தலையை சொரிவதையும் காண முடிந்தது.
Some frames are flawlessly awesome, when you get 7in1 frame & that too in a total synchronization. #wildlense @ParveenKaswan @paragenetics @Saket_Badola @rameshpandeyifs @SudhaRamenIFS @dipika_bajpai pic.twitter.com/xmFBPCfaWD
— WildLense® (@WildLense_India) July 13, 2020
அதாவது, பார்ப்பதற்கு 4 யானைகள் நின்று தண்ணீர் குடிப்பது போன்று தெரிந்தாலும், ஏகப்பட்ட கால்கள் கண்ணுக்கு தெரிய கன்ஃபியூஸ் ஆனார்கள் பார்வையாளர்கள்.
ஒருக்கட்டத்தில், மொத்தம் எத்தனை யானைகள் தான் இருக்குன்னு கண்டுபிடிச்சே தீருவேன்னு வம்படியாக நின்றவர்கள், மணிக்கணக்காக போனையே வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்களே தவிர, ரிசல்ட் கிடைக்கவில்லை.
— WildLense® (@WildLense_India) July 14, 2020
நீங்களாவது எத்தனை யானை நிக்குதுன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு சொல்லுங்க.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil