“அங்கே என்ன தெரிகிறது? அது ஒன்னுமில்ல டா…” மின் கம்பத்தில் ஏறி வேடிக்கை பார்த்த கரடி – வைரல் வீடியோ

இந்த கரடியை காப்பாற்ற பக்கெட் லிஃப்ட்டில் சென்ற ஊழியர் ஒருவர் “ஏய் குட்டி கரடி… இப்போ இந்த கம்பத்துல இருந்து இறங்க நேரம் வந்துருச்சி” என்று ஆசை வார்த்தை காட்டி கீழே அழைத்து வந்துள்ளார்.

Tamil Viral news Trending video of Bear gets stuck atop power pole

Tamil Viral news Trending video of Bear gets stuck atop power pole : வில்காக்ஸில் அமைந்திருக்கும் தெற்கு ஆரிசோனா பகுதியில் ஒரு குட்டி கரடி ஒன்று, மின் வெட்டு ஆன சமயம் பார்த்து மின்கம்பம் ஒன்றில் ஏறி வீரசாகச வித்தையை காட்டியுள்ளது. கொஞ்சம் நேரத்தில் “க்ரண்ட்” வந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும் என்று தெரியாமல், மேலே சென்ற அந்த கரடி அங்கிருந்த மின் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது.

இதனை பார்த்த பலர் உள்ளூர் நிர்வாகிகளுக்கு தகவல்கள் அளிக்க அந்த பகுதியில் மின் இணைப்பு சிறிது நேரத்திற்கு துண்டிக்கப்பட்டது. பின்பு அலுவலர் வெர்னெர் நெபுரர் கரடியிடம் பேசி அதனை பத்திரமாக கீழே இறங்க வைத்திருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகளும் அந்த கரடி மேலே இருந்து கீழே இறங்கி வந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பக்கெட் லிஃப்ட்டில் ஏறிய அவர் அந்த கரடியின் அருகே சென்று “சரி குட்டி கரடியே, கீழே இறங்க நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார். “கரடிக்கு நான் என்ன பேசுகின்றேன் என்பது புரியாது. ஆனால் அதற்கு அந்த “அட்டென்சன்” தேவைப்பட்டது என்று கூறினார் வெர்னெர். பிறகு சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கரடி கீழே இறங்கி வந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral news trending video of bear gets stuck atop power pole

Next Story
இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளா? என்ன டான்ஸ் பாருங்க! வைரல் வீடியோDreamum Wakeupum, viral video, trending viral video, viral videos, trending viral videos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com