Viral video : வன உயிரினங்களுக்கு தொல்லை தராமல் அதனை அப்படியே அதன் இயல்பில் வாழ விட வேண்டுமென்று எத்தனை முறை கூறினாலும் நம் மக்கள் அதனை புரிந்து கொள்ள முயல்வதே இல்லை. ஒன்று வனவிலங்குகளை பார்த்தால் செல்ஃபி எடுக்கிறார்கள், யானைகள் போன்ற பேரூயிர்கள் வந்தால் கத்தி, கூச்சல் போட்டு அதனை அச்சுறுத்துகிறார்கள். தற்போது அப்படியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் தடோபா வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் இரண்டு நடந்து வர அது வரும் வழியைவிட்டு உடனே நகராமல் அதற்கு அழுத்தத்தை தரும் வகையில் மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக இடவெளி விட்டு இரு சக்கர வாகனங்களில் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
In the viral video, bikers are seen obstructing the path and moving closer to the tigers pic.twitter.com/Pww5OekPtp
— The Indian Express (@IndianExpress) June 3, 2021
புலிகள் அதன் வாழிடங்களில் நிம்மதியாக வாழ விடாமல் இப்படியா தொந்தரவு செய்வது என்று நெட்டிசன்கள் தங்களின் வருத்தங்களையும் கோபத்தையும் பதிவு செய்துள்ளனர். புலிகள் ஆக்ரோசம் அடைந்திருந்தால் சிறிது நேரத்தில் நிலைமை வேறாகவே மாறியிருக்கலாம். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நல்ல நேரம் அதனால் தான் ஏதும் ஆகவில்லை என்றும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, தடோபா - அந்தரி புலிகள் காப்பக அதிகாரிகள் இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது போன்ற செயல்கள் நாளை நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் இந்த இளைஞர்களின் செயல்கள் குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil