Wild boars narrow escape from a cheetah : இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண்டதும் தான். வனவிலங்குகளின் செயல்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்த ஒரு போதும் தவறுவதில்லை என்பதை பல்வேறு வைரல் வீடியோக்கள் நமக்கு அடிக்கடி நிரூபித்து விடுகின்றன.
WildLense Eco Foundation என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் முதலில் தாய் பன்றி நடந்து செல்கிறது. அதனை தொடர்ந்து அதன் குட்டிகள் மூன்றும் நடந்து செல்கின்றன. அட ஹாயா ஒரு பிக்னிக் போக முடியுதான்னு யோசிச்சுக் கொண்டே நடந்த தாய் பன்றி சிறிது நிதானித்துவிட்டு ஒரு ஓட்டம் எடுக்க ஆரம்பிச்சது பாருங்க… ஒலிம்பிக் போட்டிகள் எல்லாம் ஓரமாய் போய் நிக்கணும்.
என்னடான்னு பாத்தா, பன்றியின் திசையை நோக்கி படு ஜோராக, புல்வெளிக்குள் இருந்து பாய்ந்து வருகிறது சிறுத்தை. நாம் கூட ஏதாவது ஒன்றை சிறுத்தை கொன்றுவிடுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து பன்றிகளும் சிறுத்தைக்கு தண்ணீ காட்டிவிட்டு வெவ்வேறு பக்கம் சிதறி மறைந்துவிட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil