scorecardresearch

பலத்தை விட பாசம் பெரிது… பாம்பை விரட்டியடித்து குட்டியை மீட்ட எலி வீடியோ!

Tamil Viral Update : விலங்குகள் செய்யும் வித்தியாசமான சேட்டைகள், உயிரை காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டம், உள்ளிட்ட பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.

Tamil Viral Video : உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு வகையில் மற்ற உயிரினங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. தவளைக்கு பாம்பு எதிரி, பாம்புக்கு பருந்து எதிரி என்று ஆறு படத்தின் வசனத்தை போல ஒரு உயிரினம் மற்ற உயிரினத்தை தனது உணவாக பயன்படுத்தி வருவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வு.

இதில் ஒரு சில முறை பலம் வாய்ந்த உயிரினத்திடம் இருந்து பலம் குறைந்து சிற்றுயிரினம் தனது சமயோசித புத்தியை பயன்படுத்தி தப்பிச்சென்றுவிடும். அந்த வகையில் தற்போது பாம்பிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்கும் முயற்சியில் பாம்பை எலி ஓட ஓட விரட்டும் ஒரு வீடியோ காட்சி இணைத்தில் வைரலாக பரவி வருகிறது.

டெக்னாலஜி வளர்சியின் காரணாமான உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்கிறோம். சில சுவாரஸ்யமான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி பலரின் பார்வைக்கு சென்றுவிடும். இதில் மனிதர்கள் பலரும் தங்கள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் வித்தியாசமாக எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் விலங்குகள் செய்யும் வித்தியாசமான சேட்டைகள், உயிரை காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டம், உள்ளிட்ட பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.

அப்படியான ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எலிக்கு எப்போதுமே பாம்பு எதிரிதான். எலி இருக்கும் இடத்தில் பாம்பு நிச்சயம் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படிததான் இங்கு ஒரு எலி பாம்பிடம் சிக்கிய தனது குட்டி எலியை காப்பாற்றுவதற்காக விஷத்தன்மை கொண்ட பாம்புடன் போராடுகிறது. ஒரு கட்டத்தில் எலியிடம் தோற்ற பாம்பு, தப்பித்து ஓட முயற்சிக்கிறது.

ஆனால் பாம்பை விடாமல் எலி துரத்துகிறது. இந்த வீடியோ கடைசியில் என்ன ஆனது என்று பலரும் பார்க்கும் வகையில் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இறுதியில் எலியிடம் தோற்றுப்போன பாம்பு புதருக்குள் சென்றுவிடுகிறது. அதன்பிறகு தனது குட்டியை பார்க்கும் எலி அதனை அப்போது அனைத்துக்கொண்டு சென்றுவிடுகிறது.  இணையத்தில் பெரும் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை தற்போது சுமார் 20 ஆயிரத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த ஒரு ஐஎஃப்எஸ் அதிகாரிஒருவர், ஒவ்வொரு உயிரினமும் தனது இருப்பை காப்பாற்றிக்கொள்ள போராடுவது இயல்பான ஒன்று என்ற பதிவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil viral rat chases snake on road viral video update