குக்கரை திருமணம் செய்துகொண்ட வாலிபர்; ஒருவேளை 90ஸ் கிட்ஸா இருப்பாரோ?

தில் எனக்கான பர்ஃபெக்ட் துணை கிடைப்பது சிக்கலான ஒன்று தான் போல. நான் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்று முகநூலில் பதிவிட்டு மேலும் அதிர்ச்சியை கூட்டினார்.

Man marries rice cooker, trending news, viral news,

trending news man marries rice cooker; அட கல்யாணம் பண்ணாலும் தொல்ல, பண்ணாம இருந்தாலும் தொல்ல… ஓவரா ப்ரஷர் ஏத்துற சொந்தகாரங்க மத்தியில என்னதான் பண்ண முடியும்? அவர்களின் வாயை அடைக்க இந்த இந்தோனேசிய மனிதர் போல குக்கரை திருமணம் செய்து கொள்ளுங்கள்! பிரஷரை குறைங்க..

”நல்ல நிறமான, அமைதியான, பணிவான, அதிகம் பேசாத, சமைக்க தெரிந்த என் மனைவி இதோ என்று இந்தோனேசியாவின் ஜாவா பகுதியை சேர்ந்த கொய்ருள் அனம் ஒரு முகநூல் பதிவைப் போட்டு அதில் வெள்ளை நிற முக்காடு அணிந்த தன்னுடைய மனைவியை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இந்த கேப்சனே ஒருவிதமான அதிர்ச்சி அளிக்க என்னவென்று பார்த்தால், குக்கரை முறைப்படி திருமணம் செய்து அதனை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த திருமணமும் வெகுநாள் நீடிக்கவில்லை. நான்கு நாட்கள் கழித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிகவும் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் எனக்கான பர்ஃபெக்ட் துணை கிடைப்பது சிக்கலான ஒன்று தான் போல. நான் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்று முகநூலில் பதிவிட்டு மேலும் அதிர்ச்சியை கூட்டினார்.

விளையாட்டுக்காக தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார் என்றாலும் கூட, வாழ்க்கை துணைவி என்ற ஒருவரை நீங்கள் தேர்வு செய்ய என்னென்ன தகுதிகளை எல்லாம் அவர் பெற்றிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் சிலர். பலர் விளையாட்டு தனமாக தங்களின் கருத்துகளையும் அந்த பதவின் கீழ் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த திருமணம் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral trending news man marries rice cooker divorced later

Next Story
மினி இட்லி, பொடி இட்லிலாம் பழசு; இதுக்கு பேரு தான் குச்சி இட்லிViral news, trending viral news, idli ice cream
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com