Tamil Viral update : இயற்கை என்பது நமக்கு எப்போதும் ஆச்சரியம் அளிக்கும் ஒரு அற்புதம் தான். கேமராக்கள் இல்லாமல் போனால் உலகின் பல்வேறு அதிசயங்களை நம்மால் நிச்சயமாக கண்டிருக்கவே முடியாது.
Advertisment
மீன் கொத்திப் பறவை ஒன்று தன்னுடைய குஞ்சுகளுக்கு தனித்தனியாக உணவளிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முட்டையிட்டு, முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவந்த நாள் முதல், ஓரளவுக்கு வளர்ச்சி அடையும் வரை தாய் எவ்வாறு தன்னுடைய குஞ்சுகளை பத்திரமாக பாதுகாத்து அதற்கு உணவளிக்கிறது. இந்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு அதனை 1.50 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
Watching this clip of Common Kingfisher on loop. Particularly the way babies are fed separately at the end. (From World birds) pic.twitter.com/k5u9OfdW9k
இந்த வீடியோவை இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil