New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/comedy-photo_1200_twt.jpeg)
இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சி அடைகிறது. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் எது என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
Tamil viral update Comedy Wildlife Photos : மிகவும் நகைச்சுவையான வனவிலங்கு புகைப்படங்களுக்கான விருதுகளை அறிவித்தது Comedy Wildlife Photo Awards குழுமம். உலகெங்கிலும் இருந்து 7000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பெற்ற இந்த குழுமம் இறுதியாக 42 புகைப்படங்களை தேர்வு செய்து மக்களின் விருப்பமான புகைப்படங்கள் எது என்பதை தேர்வு செய்ய பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.
இந்த 42 புகைப்படங்களில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சிரிக்கும் பாம்பின் புகைப்படம், ஆஸ்திரேலியாவில் ஆடும் கங்காருகள், மற்றும் ஃபால்க்லாந்து தீவுகளில் ஸ்டிஃப்பாக நடந்து வரும் பென்குயின்களின் புகைப்படங்களும் அடங்கும்.
வனவிலங்கு புகைப்படங்களின் இலகுவான மகிழ்ச்சியான பக்கங்களை பதிவு செய்யும் பொருட்டு தொழில்முறை புகைப்படக்கலைஞர்களான பால் ஜோய்ன்சன் ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகியோர் இந்த முயற்சியை 2015ம் ஆண்டில் துவங்கினார்கள். இந்த முறை வரும் மொத்த வருமானத்தை ஒரங்குட்டான் குரங்களை பாதுகாக்க செலவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சி அடைகிறது. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் எது என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.