New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Leopard.jpg)
Tamil Update : பூனை ஒன்று சிறுத்தையுடன் நேருக்கு நேர் நின்று சண்டைக்கு செல்லும வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil Viral Video Update : கிணற்றில் சிக்கியிருக்கும் பூனை தன்னை விட உருவத்திலும் வலிமையிலும் பெரிதான சிறுத்தையை எதிர்த்து நிற்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேகமாக ஓடும் விலங்குகளில் முக்கிய்யமான ஒன்று சிறுத்தை. தனது இரையை மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று பிடிக்கும் வல்லமை உள்ள சிறுத்தையை கண்டு சிறிய விலங்குகள் அஞ்சி ஓடுவதை பல வீடியோக்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் அதற்கு நேர்மாறாக சிறுத்தையை விட அளவில் மற்றும் பலத்தில் சிறிதான பூனை ஒன்று சிறுத்தையை எதிர்த்து நிற்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ஒரு பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குறைந்த அளவு தண்ணீர் உள்ள ஒரு கிணற்றில் பூனை ஒன்று மாட்டிக்கொண்டது. அதே கிணற்றில் பூனையுடன் சிறுத்தையும் அகப்பட்டுள்ளது. அப்போது கிணற்றில் பூனைக்கும் சிறுத்தைக்கும் இடையிலான சண்டை பார்வையாளர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த சண்டையில் இரண்டு விலங்குகளும் தலையுடன ஒட்டிக்கொள்வதை காணலாம்.
#WATCH | Maharashtra: A leopard and a cat come face-to-face after falling down a well in Nashik
"The leopard fell in the well while chasing the cat. It was later rescued and released in its natural habitat," says Pankaj Garg, Deputy Conservator of Forests, West Nashik Division pic.twitter.com/2HAAcEbwjy— ANI (@ANI) September 6, 2021
இதில் பூனையை துரத்தும்போது சிறுத்தை கிணற்றில் விழுந்துவிட்டதாக மேற்கு நாசிக் பிரிவின் துணை வனப்பாதுகாப்பாளர் பங்கஜ் கார்க், கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு விலங்குகளும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு அவைகளின் வாழ்விடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.