New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Snak.jpg)
Tamil Viral : தன் குஞ்சுகளை பாதுகாக்க கோழி 3 பாம்புகளுடன் சண்டையிடும் காட்சி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்ப ஒவ்வொரு உயிரினமும் தான் பெற்றொடுத்த உயிரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறது. இதில் ஒரு சில பறவைகள் தான் பெற்றெடுத்த உயிருக்காக தன்னைவிட பெரிய உயிரினத்துடனே சண்டையிடும்அளவுக்கு பாசப்பினைப்புடன் உள்ளது. இது மனித உயிர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களும் உணவுச்சங்கிலியின் அடிப்படையில் அவற்றின் வாழ்க்கை அமைகின்றன. இதன்படி அனைத்து உயிரினங்களும் மற்ற ஏதாவது ஒரு உயிரினத்திற்கு பயந்து வாழ்வதே இந்த உணவுச்சங்கிலி உணர்த்துகிறது. அந்த வகையில், தான் பொறித்த குஞ்சுக்காக ஒரு கோழி 3 பாம்புகளுடன் சண்டையிடும் பாசப்போராட்டம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் , சமீபத்தில் குஞ்சு பொறித்த கோழி ஒன்று ஒரு அறையின் மூலையில் தனது குஞ்சுகளுடன் அமர்ந்திருக்கிறது. அப்போது அதனை சுற்றி 3 பாம்புகள் நிற்கிறது. இதில் பாம்புகள் கோழியின் அருகில் செல்வதும், இதை பார்த்து கோழி பாம்பை கொத்துவதும் பார்க்கவே பயங்கரமான உள்ளது. தனது 3 குஞ்சுகளை பாம்பிடம் இருந்து பாதுகாக்க இந்த தாய் கோழி எடுக்கும் போராட்டம் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.