New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/child-video.jpg)
Three Years Baby Cooking Video : 3 வயது குழந்தை சமையல் செய்யும் வீடியோ இணையதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Tamil Cooking Viral Video : உலகம் முழுவதும் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்களது திறமையை வெளியுலகம் அறிந்து கொள்ள ஒரு வாய்பை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றனர். பாமர மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை பெரும்பாலானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு அம்மா தனது மகன் சமையல் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நியூயார்க்கில் உள்ள கிரேட் நெக் நகரைச் சேர்ந்த லிட்டில் செஃப் இல்லிரியன் காமராஜ் என்ற அந்த 3 வயதே ஆன குழந்தை தனது ஒரு வயதில் இருந்து தனது தாய் டொரெண்டினாவுடன் சேர்த்து சமைத்து வருகிறார். தற்போது அந்த குழந்தை தனியாக சமைக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று பெரும் வைரலாகி வருகிறது.
இந்த குழந்தையின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ‘செஃப் இல்லிரியன்’ என்ற பெயரில் உள்ளது. ஊரடங்கு காலத்தின் போது இல்லிரியன் தன்னை மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காகவும் வைத்துக்கொள்ள சமைக்க தொடங்கினான் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம், தாய்-மகன் இரட்டையர் பேக்கிங் கப்கேக்கின் வீடியோக்களை ஆன்லைனில் பதிவு செய்ய அதிகம் சமைக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது குழந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 50,000க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். டோரெண்டினா தனது மகனை எப்போதும் கத்தியைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அவர் காய்கறிகளை நறுக்கும் போது சாப்பிங் இயந்திரம் அல்லது பிற கருவிகளைப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யும் திறன் கொண்டவர்கள். ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முயற்சி செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.