Advertisment

பைக் டூம் லைட்டில் நாகப்பாம்பு: பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்; வைரல் வீடியோ!

இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர் பாட்டிலில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

author-image
WebDesk
New Update
Snake12

கோவை சிங்காநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் புகுந்த நாகப் பாம்பை, பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் 1.5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அமீன் என்பவரை அழைத்தனர். அங்கு வந்த ஸ்னேக் அமீன் இரு சக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் சிக்கியிருந்த பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்து, அதனை தண்ணீர் பாட்டிலுக்குள் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

மேலும் அங்கிருந்த மக்களிடம் பேசிய ஸ்நேக் அமீன் குடியிருப்பு பகுதியில் தேவையற்ற குப்பைகளை சேர்க்க வேண்டாம், புதர் மண்டிய பகுதிகளை அகற்ற வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் தென்பட்டால் அதனை அடித்துக் கொல்லக்கூடாது. தீயணைப்புத் துறையினர் அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Snakes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment