சமீப காலங்களில இணையதளத்தில் பயன்பாடு சிறுவாகள் முதல் பெரியவர்கள்அவரை அனைவரையும் அதிர் மூழ்க வைத்துள்ளது என்றே சொல்ல்லாம். இளைஞர்கள், சிறுவர்கள் பெரியர்கள், பெணகள், என பலரும் தங்களது வீடியோ, போட்டோ, மற்றும் தாங்களின் அண்றாட பணிகள் குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் தங்கள் வலைதளத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சி, மற்றும் ஆபாசத்தை கையிலெடுத்து வருகின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீப காலங்களாக இணையத்தில் குழந்தைகளின் அட்ராசிட்டி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு பகுதி குழந்தைகள் தங்களின் தனித்திறமையை காண்பிக்கும் வீடியோவாகவும்,மற்றொரு பகுதி குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் செய்யும் சேட்டைகள் குறித்து வீடியோவாகவும் வெளிவருகிறது. இதில் சில வீடியோக்கள் நமக்கு சிரிப்பை வரவழைத்தாலும், அதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு சிறுவனின் வீடியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வீடியோவில் ஒரு சிறுவன், தனது தாயிடம், 1,2,3 சொல்ல கஷ்பட்டு, ‘அம்மா.. ஏன்மா.. கொடுமை படுத்துற.. ப்ளீஸ் மா ஐயோ’ என கதறுகிறான். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர், கொரோனா காலத்திற்கு பின், பெற்றோகள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், பள்ளி ஆசிரியர்கள் பாடம் புகட்டுவதும் சவால் நிறைந்த்து என்று பதிவிட்டுள்ளார். காலம் தான் குழந்தைகளை நல்வழி படுத்தவேண்டும் என கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், ஒரு தலைமுறையின் எதிர்காலமே வீணாகி வருகிறது இது சிரிக்கவேண்டிய விஷயம் அல்ல. சிந்திக்கவேண்டிய விஷயம். என பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் இது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், குழந்தைகளை பெற்றோர் துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது எனவும் பதிவிட்டுள்ளனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஒரு சிறுவனை சில இளைஞர்கள் கடத்திச் செல்வதாக கூறுவதும், அதற்கு அந்த சிறுவன் அவர்களிடம் ம்மா.. என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. என்னை வந்து காப்பாத்தும்மா” என அந்த சிறுவன் பதறி அழும் காட்சி பலரையும் நெஞ்சை பதறவைத்த்து. ஆனால் இறுதியில் இது நாடகம் என்று அந்த இளைஞர்களே கூறியது பலரையும் எரிச்சலடைய செய்தது. டிக் டாக்கில் லைக்ஸ் மற்றும் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக சிலர் இந்த வீடியோ வெளியிட்டனர்.
இணையத்தில் லைக்ஸ் மற்றும் பிரபலமாக வேண்டும் என்ற மோகம் பலரையும் இணையத்தில் மூழ்கடிக்க செய்கிறது. இதில் சில வீடியோக்கள் மக்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், பலவீடியோக்கள் மக்களுக்கு எரிச்சலையும், முக சுலிப்பையும் ஏற்படுத்தி வருவதே நிதர்சமான உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil