New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Kiss-Woman.jpg)
Tamil Viral Video : குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு விலங்கு ஒன்றுடன் வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது.
Chimpanzee Kissing Woman : புகைப்படம் எடுக்கும் போது பெண்ணுக்கு சிம்பன்சி முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்களிடையே சமூக ஊடகங்களில் பயன்பாடு அதிகமாகி வருகிறது. அதிலும் சுற்றுலா மட்டுமின்றி சமாதாரணமாக வெளியில் சென்றாலும் இளைஞர்கள் பலர் வித்தியாசமாக புகைப்படங்களை எடுத்து அதனை தங்களதுசமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி பதிவிடப்படும் விடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பல வீடியோக்கள் நம்மை மெய்மறந்து சிரிக்க வைக்கும்.
அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நம்மை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்துள்ளது. சமீபத்திர் கணவன் மனைவி மகன் என சுற்றுலா சென்ற ஒரு குடும்பம் சுற்றுலா சென்று பல இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அப்போது ஒரு இடத்தில், சிம்பன்சியுடன் அமர்ந்து கணவன் மனைவி மகன் என அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து, அந்த கணவன் வேறு எங்கோ சென்றுவிட்ட நிலையில், மனைவியும் மகனும், சிம்பன்சியுடன் தனியாக புகைப்படம் எடுத்தனர்.
அப்போது முதலில் சிம்பன்சி அந்த பெண்ணின் தோளில் கை போட்டது. பின்னர் யாரும் எதிர்பாராத வண்ணம் அவரை முத்தமிடத் தொடங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக மிகவும் வேடிக்கையான மனோபாவத்தைக் கொண்ட சிம்பன்சிகள் மீண்டும் தனது வேடிக்கை செயலை நிரூபித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.