New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Snake.jpg)
கீரியை கண்டதும் படமெடுத்து ஆடும் பாம்பு கீரியை தாக்கி களைப்படையும்போது கீரி பாம்பின் தலையில் தாக்கி அதனை கொண்றுவிடும்.
பாம்புக்கு கீரி பரம எதிரி என்பது அனைவருக்கும் தெரியும். கீரி சிரிய கால்களை கொண்ட குட்டையாக விலங்குதான் என்றாலும் கூட எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் தனது அசாத்திய திறமையால் வீழ்த்தும் வல்லமை கொண்டது. இதில் உலகின் கொடிய விஷம் கொண்ட முக்கியமான பாம்பு வகைகளில் ஒன்றாக ராஜநாகம் கூட கீரியிடம் தோற்ற சரித்திரம் உள்ளது.
கீரியின் உடலில் இயல்பாவே விஷத்தினை எதிர்க்கும் சக்தி இருப்பதால் பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்வதில்லை. இதனால் கீரி பாம்பை கண்டாலே தனது முழு திறமையையும் காட்டி அதனை வீழ்த்தும் முயற்சியில் இறங்கும். இந்த மாதிரியான சண்டைகளில் 80 முதல் 90 சதவீதம் வரை கீரியே பாம்பை கொன்றுவிடும்.
கீரியை கண்டதும் படமெடுத்து ஆடும் பாம்பு கீரியை தாக்கி களைப்படையும்போது கீரி பாம்பின் தலையில் தாக்கி அதனை கொண்றுவிடும். களைப்பில் உள்ள பாம்பு கீரியை எதிர்க்க சக்தி இல்லாமல் மரணித்துவிடும் இதில் சில சமயங்களில் பாம்பு கீரியை கொண்றுவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோவில் பாம்பு கீரி இரண்டும் மூர்க்கத்தனமாக சண்டையிட்டு கடையில் இரண்டுமே பரிதாபமாக இறந்துவிடுகிறது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கீரி ஆக்கிரோஷத்துடன் நாகப்பாம்பு ஒன்றை கடித்து குதறுவதைக் காணலாம். கீரியை நேருக்கு மோதும் நாகமும் விடாமல் உக்கிரத்துடன் சண்டையிடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.