Advertisment

வீடியோ: யாரையும் உதவிக்கு எதிர்பார்க்கலை... சுந்தர், மேனகாவுக்கு எவ்ளோ அறிவு?!

Elephants Trending video: மனித நடத்தையை வெளிப்படுத்தும்  யானையின் அறிவாற்றல் திறன்களை கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: யாரையும் உதவிக்கு எதிர்பார்க்கலை... சுந்தர், மேனகாவுக்கு எவ்ளோ அறிவு?!

Tamil Viral Video: சமீபத்தில், பெங்களூர் மிருகக்காட்சிசாலை ஒன்றில் மனிதக் குரங்குகள் போல் மனித நடத்தையை வெளிப்படுத்தும்  யானையின் அறிவாற்றல் திறன்களை கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். இரண்டு யானைகள், கிடைக்கும் மரக்கிளைகளைப் பயன்படுத்தி தங்கள் நமைச்சலை போக்கி கொள்ளும் அந்த வீடியோ  தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி  வருகிறது.

Advertisment

" பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் ஆசிய யானைகள் (எலிபாஸ் மாக்சிமஸ்) உபகரணங்களை  பயன்படுத்துவதன் மூலம் அறிவாற்றல் திறன்களை வெளிப்படுத்துகின்றன !!" "கோயில்களில் இருந்து மீட்கப்பட்ட யானை சிறிய மரக்கிளைகளைப் பயன்படுத்தி தங்கள் நமைச்சலை போக்கிக் கொள்கின்றன" என்று மிருகக்காட்சிசாலை தங்கள் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தது.

 

பூங்காவில் உள்ள 23 ஆசிய யானைகளில் சுந்தர் எனும் யானை, காது, வாய் போன்ற பகுதிகளில் மரக்கிளையைப் பயன்படுத்தி நமைச்சலை போக்கி கொள்கிறது. பொதுவாக, யானை தனது  உடற்பகுதியில் உள்ள நமைச்சலை போக்க மரங்களை தேடிக் கொள்கின்றன. 2014 முதல் பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் தங்கியிருக்கும் இந்த யானை , மகாராஷ்டிரா மாநிலம்  கோலாப்பூரில் உள்ள கோவிலில் இருந்து மீட்கப்பட்டது.

 

சுந்தரின் அறிவாற்றல் தன்மை அனைவரையும், உற்சாகப்படுத்தி வரும் வேளையில், சுந்தரின் நெருங்கிய  துணையான மேனகாவும் இதே போன்ற செயலை வெளிப்படுத்தி வருகிறது. மேனகா, ஒரு மரக்கிளையைப் பயன்படுத்தி கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள  நமைச்சலை போக்குகிறது!

 

"நாகர்ஹோளே தேசிய பூங்காவில் (Nagarhole National Park)  ஈக்களை விரட்ட யானைகள் மரக்கிளைகளை எவ்வாறு சாதூர்யமாக  பயன்படுத்துகின்றன  என்பதை 2001 இல் ஹார்ட்  தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்தார்.

"பெருமூளைப் புறணிப் (cerebarl Cortex) பகுதி நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதால்  யானையின் மூளை-உடல் அளவு விகிதம் பிற உயிரினங்களை விட அதிகமாக உள்ளது . எனவே, யானைகள் சிம்பன்ஸிகள் மற்றும் ஒராங்குட்டான்கள் போன்ற மனிதக் குரங்குகளுக்கு சமமானவை,”என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த, வீடியோ சமூக ஊடங்களில் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.

 

 

 

 

 

 

காக்கை உள்ளிட்ட  பிற பறவைகள், டால்பின்கள், குரங்குகள்,  ஆக்டோபஸ் போன்ற பிற உயிரினங்கள் சிக்கலான சூழ்நிலைகளைத் தீர்க்க உபகரணங்களை பயன்படுத்துகின்றன என்றும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment