New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/a57-1.jpg)
tamil viral video, latest tamil viral, social media viral news, வைரல் வீடியோ, வைரல் செய்திகள், தமிழ் வைரல் வீடியோ, வைரல் தமிழ்
tamil viral video, latest tamil viral, social media viral news, வைரல் வீடியோ, வைரல் செய்திகள், தமிழ் வைரல் வீடியோ, வைரல் தமிழ்
Tamil Viral Video: ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையே 40 வயதில் தான் தொடங்குகிறது என்று பொதுவாக சொல்வதுண்டு. 23 வயதில் வேலைக்கு சென்று, 25 வயதில் லட்சத்தில் சம்பளம் வாங்கி, 27 வயதில் காஸ்ட்லி கார், வீடு, திருமணம் என்று செட்டில் ஆகி, எல்லாம் கையில் கிடைத்த பிறகு, 35 வயதிற்குள் அவர்களின் தேடலே நின்று போய்விடும்.
அதன்பின் எதற்காக வாழ்கிறோம் என்று அவர்களுக்கும் தெரியாது, வாழ்க்கைக்கும் தெரியாது. ஆனால், வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமானது. ஒருவன் தோற்று தோற்று, துவண்டு துவண்டு, அடிப்பட்டு எழுந்து நிற்கும் போது, வாழ்க்கையை கற்கிறான். அவனே வாழ்க்கையை நேசிப்பவனாக இருக்கிறான்.
40 வயதில் அவன் ஒரு புது வாழ்க்கையை தொடங்குகிறான். இவர்களைப் போன்றவர்களுக்கு வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே. நம்ம ஜெயா பாட்டிக்கும் அப்படித்தான்.
76yr old Jaya from Brahmanapalle of Anantapur district #AndhraPradesh has fun, the same way her grandchildren enjoy.
For some, age is just biological. They remain young at heart pic.twitter.com/Nw6t97AlyK
— P Pavan (@pavanmirror)
76yr old Jaya from Brahmanapalle of Anantapur district #AndhraPradesh has fun, the same way her grandchildren enjoy.
— P Pavan (@pavanmirror) May 26, 2020
For some, age is just biological. They remain young at heart pic.twitter.com/Nw6t97AlyK
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிராமணபள்ளியைச் சேர்ந்த ஜெயா (76) பாட்டி தனது வீட்டின் முற்றத்தில் இருக்கும் மரத்தில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் விளையாடும் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
30 வயதுக்கெல்லாம் முட்டி தேய்ந்துவிட்டது என முனங்கும் சோம்பேறிகள் மத்தியில், 76 வயது ஜெயா பாட்டி உண்மையில் நமக்கெல்லாம் ஒரு ரோல்மாடல் தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.