லாக்டவுன் எப்போது முற்றுப்பெறும் என்று பலரும் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'முடியலா மாமா' ரேஞ்சில் அனைவரும் முனங்கிக் கொண்டிருக்க, அரசோ கொஞ்சம் கொஞ்சமாக தளர்வை அறிவித்து வருகிறது. நேற்று (மே,4) முதல் கொஞ்சம் தளர்வு அறிவிக்கப்பட்டதற்கே 'இதோ வந்துட்டேன்' என்று அடிக்குற வெயிலிலும் ஐஸ் மழையில் நனைவது போல் சாலைகளில் உலாவிக் கொண்டிருந்தனர். வீட்டிற்கு போகவே எவருக்கும் மனமில்லை போல,...
அப்படித்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நாய்க்கு இருந்துள்ளது. எல்சி என்னும் அந்த நாய், தன் உரிமையாளருடன் வாக்கிங் சென்றுள்ளது.
தரதரவென இழுக்கப்பட்ட குழந்தை; பட்டப்பகலில் கிட்னாப் செய்த குரங்கு - வீடியோ
வாக்கிங் முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு அருகில் வந்தபோது எல்சி, தன் உரிமையாளர் மைக் குக்கின் பேச்சைக் கேட்காமல் நடு ரோட்டில் அடம்பிடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்தான வீடியோ ஒன்று டிக் டாக் தளத்தில் பகிரப்பட்டு, அது படுவைரலாக மாறியுள்ளது.
இது குறித்து குக், ஏபிசி செய்தி நிறுவனத்திடம், “நான் என் நாய் எல்சியை வாக்கிங் அழைத்துச் சென்றேன். அது அதற்கான மூடில் இருக்கவில்லை. அந்த வீடியோ எடுக்கப்பட்டதிலிருந்து ஒரு 100 மீட்டரில்தான் எங்கள் வீடு உள்ளது. நாங்கள் வீட்டுக்கு அருகில் வந்தபோது அது அங்கு செல்ல விரும்பவில்லை,” என்கிறார்.
மிகவும் நகைச்சுவையான வீடியோவில், எல்சி, குக் இழுக்க இழுக்க நகராமல் அப்படியே நடைபாதையில் அமர்கிறது. பிறகு அப்படியே படுத்துக் கொள்கிறது. என்னதான் செய்தாலும் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மறுக்கிறது. அப்புறம் என்ன பண்ணுதுன்னு நீங்களே பாருங்க.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil