Tamil Viral Video : காட்டெருமை ஒன்றை சிறுத்தை கூட்டம் துரத்துதலில் இருந்து இலாவகமாக தப்பிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
காடுகளில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் முக்கிய கடமையாககும். அவ்வாறு வனஉயிரினங்களை பாதுகாக்க சரணாலயங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களில் பெரிய உயிரினம் சிறிய உயிரினங்களை அடித்து சாப்பிடுவது அவற்றின் இயல்பான நடைமுறைகளில் ஒன்று. இதில் உருவத்தில் பெரிதாக உள்ள சில விலங்குளை சிறிய விலங்குகள் தாங்குவதும் உண்டு. அவ்வாறு விலங்குகளுக்குள் நடைபெறும் தாங்குதல் சம்பவங்கள் குறித்து வீடியோ அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இந்த வீடியோக்களுக்கு வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருக்கும். மேலும் இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும்போது அதிகமான பார்வைாயளர்களை பெறும். இதில் ஒரு சிறிய விலங்கு சாதாரணமாக ஒரு பெரிய விலங்கை தாக்கும் வீடியோக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், காட்ருமை ஒன்றை சிறுத்தைகுட்டிகள் சேர்ந்து துரத்தும் வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் காட்டெருமை ஒன்றை பல சிறுத்தை குட்டிகள் தாக்குவதற்காக துரத்துகின்றன. இதனால் தனது உயிரரை காப்பாற்றிக்கொள்ள இந்த காட்டெருமை தண்ணீரில் இறங்கி வேகமாக ஓடுகிறது. ஆனாலும் சிறுத்தை குட்டிகள் விடாமல் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில் காட்டெருமையை மடக்குவதற்காக சிறுத்தை குட்டிகள் சில ஒன்றாக இணைந்து காட்டெருமை வரும் பாதையை தடுக்கிறது. ஆனால் இந்த தடுப்பை பொருத்படுத்தாக காட்டெருமை சிறுத்தை குட்டிகளை ஜம் செய்து தாண்டி ஒடி விடுகிறது.
ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இலக்கை விட இலக்குக்கான பாதை முக்கியமானது என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"