பாம்பு குளிக்கிறதைப் பாருங்க... பேச்சுவார்த்தையும் நடத்துவாங்க போல..!

Snake Both Viral Video : சோமர் ரே என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

Snake Both Viral Video : சோமர் ரே என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
பாம்பு குளிக்கிறதைப் பாருங்க... பேச்சுவார்த்தையும் நடத்துவாங்க போல..!

Snake Both Viral Video : இந்தியா உட்பட உலக நாடுகளில் பலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாய் புனை தொடங்கிய மலைப்பாம்பு வரை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இதில் பலர் தங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் சாகசங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், சோமர் ரே என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. மாடலிங் துறையில் புகழ்பெற்ற அவர், சமூக வலைதங்களில் அதிகம் பின்பற்றப்படும் நபராக உள்ளார். எப்போது தனது துறை சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வரும் சோமர் ரே தற்போது பதிவிட்டுள்ள ஒரு வீடியோ பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில் குளிக்க தயாராகும், ரே தனது செல்லபிராணி பாம்பைப் பிடித்துக் கொண்டு அதனையும் குளிக்க தயார்படுத்துகிறார். இந்த வீடியோவுக்கு "பாம்பு குளியல் நேரம்," என்று தலைப்பிட்டுள்ள அவர்,  நான் எப்போதும் என் பாம்புகளை குளிப்பாட்டி, அவற்றுடன் மிகவும் மகிழ்ச்சியாக குழந்தை குரலில் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து வெண்மையான தொட்டிக்குள் அந்த பாம்பை விடுகிறார். அந்த பாம்பு தொட்டியைச் சுற்றிலும் சுற்றி வருகிறது. இதில் பாம்புகள் வெதுவெதுப்பான நீரை அதிகம் விரும்பும் என்று அவர் கூறிக்கொண்டே பாம்பிடம் விளையாடுகிறார். சுமார் 15 நிமிடங்கள் கழித்து பாம்பை தொட்டியில் இருந்து எடுக்கும் அவர், அதன் உடலில் கைகளால் தோய்க்கிறார். அப்போது பாம்பின் தோல் உறிவது தெரிகிறது.

Advertisment
Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Sommer Ray (@sommerray)

தொடர்ந்து ரே ஒரு துண்டை எடுத்து பாம்பின் உடலை துடைப்பதுடன் வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்து வலைதளவாசி ஒருவர், இது உண்மையில் மிகவும் அருமையான மற்றும் தகவல் நிறைந்த வீடியோ. பாம்புகளை கூட குளிக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் மேலும் இது போன்ற வீடியோக்களை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரே சுமார் 25.7 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ளார். சதாரணமாகவே அவரது புகைப்படங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெறுகின்றன,. தனிப்பட்ட முறையில் உருவாக்கும் உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றும் அவர், மாடலிங் உலகில் நுழைய வாய்ப்பு தேடும் பெண்களுக்காக தனது யூடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த சேனல், மிகவும் பிரபலமான உடற்பயிற்சி இடமாக அமைந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: