ஷாக் வீடியோ: கண்ணைக் கொத்திய பாம்பு; இப்படி யாரும் விளையாட வேண்டாம்!

Viral Video : பாம்பிடம் சாகசம் செய்யும் முயற்சியில் ஒருவருக்கு நேர்ந்த நிலை குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Vairal Video : மலைப்பாம்புடன் சாகசத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாம்பு கண்ணில் கடித்தது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பலர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் வைரலாக பரவி அதிக வரவேற்பை பெற்று வரும். இதில் வலைதளங்களில் அதிக வரவேற்பை பெறவேண்டும் என்பதற்காக ஒரு சிலர் விபரீத முயற்சிகளில் இறங்குவதும் உண்டு. இந்த வகையில் தற்போது ஒரு வீடியோ யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பை கண்டால் படையே நடுக்கும் என்பது பழமொழி. ஆனால் ஒரு சிலர் பாம்பை பிடித்து அதனுடன் விளையாடி வருகின்றனர். வெளிநாட்டினர் பலர் பாம்பை செல்ல பிராணியாக வளர்க்கின்றனர்.  இதில் ஒரு சிலர் பாம்பை பிடித்துக்கொண்டு சாகசம் செய்வதாக பல முயற்சிகளில் இறங்கும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. என்னதான் பாம்புடன் ஒட்டி உறவாடினாலும், அதனை பிடித்திருக்கும்போது சிறிது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அப்படி இல்லை என்றால், அது ஆபத்தில் போய்தான் முடியும்.

அந்த வகையில் பாம்பை பிடித்து சாகசம் செய்த ஒருவருக்கு நேர்ந்த நிலை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒருநபர்  மலைபாம்பை பிடித்து சாகசம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பாம்பு அவரது கையில் பலமாக கடித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாத அவர் மீண்டும் பாம்பிடம் சாகசனத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சட்டென்று விழித்துக்கொண்ட பாம்பு அவரது கண்ணை கொத்தியது.

இதன்பின், அவரது கண்ணின் மேல் பகுதியிலிருந்து ரத்தம் வழிகிறது. புளோரிடாவில் உள்ள எவர்லேண்ட்ஸ் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் உள்ள நபரின் பெயர் நிக். யூடியூபில் தனியாக சேனல் வைத்துள்ள இவர், பாம்புகளுடன் சேர்ந்து சாகசம் செய்த பல வீடியோக்களை அதில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில வைரலாகி வருகிறது. தற்போது இந்த இந்த வீடியோவை நிக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதவிட்டுள்ளார்.

நிக் பாம்பிடம் கடி வாங்குவது இது முதல்முறையல்ல. அவர் பல முறை பாம்புகளிடம் கடி வாங்கியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral video snake video viral in scoial media

Next Story
ஆட்டோவைப் பார்த்தாலே இனி ‘தல’ய தேடுவோம்: அஜித் வைரல் வீடியோajith travelling in auto rickshaw, ajith going in auto rickshaw, viral video, actor ajith viral video, அஜித், ஆட்டோவில் பயணம் செய்த அஜித், வைரல் வீடியோ, தல அஜித், அஜித் ஆட்டோவில் பயணம், ajith going by auto rickshaw, ajith man of simplicity video, ajith man of simplicity viral video, thala ajith viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com