New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a77-1.jpg)
சிறுத்தைகள் சந்தர்ப்பவாத வேட்டைக்காரர்கள்
கூரிய பற்களால் பாம்பின் கழுத்தைக் கடித்து, அதை இழுத்துக் கொண்டே ஓடுகிறது
சிறுத்தைகள் சந்தர்ப்பவாத வேட்டைக்காரர்கள்
Tamil Viral Video: கொடியவை என்று நாம் அஞ்சும் பிராணிகளுக்கே கொடிய பிராணிகள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் தான் இங்கு,
சும்மா ஒரு 10 அடி நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட பாம்பு.... கேட்டாலே டர் ஆகுதுல...
அப்படிப்பட்ட பாம்புக்கும், சிறுத்தைக்கு மோதல் ஏற்பட்டால் எப்படியிருக்கும்?
இந்த 49 நொடி வீடியோ அதற்கு பதில் சொல்லும்.
வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், கொடிய விஷம் நிறைந்த பெரிய பாம்பு ஒன்றுக்கும், சிறுத்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது, பாம்பின் தலையை கவ்விய சிறுத்தை, அதற்கு பிறகு பாம்பை அசைய கூட விடவில்லை.
Leopards are opportunistic hunters. Here it takes care so swiftly... pic.twitter.com/4QqdTpqRxA
— Susanta Nanda IFS (@susantananda3) July 23, 2020
தனது கூரிய பற்களால் பாம்பின் கழுத்தைக் கடித்து, அதை இழுத்துக் கொண்டே ஓடுகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த சுஷாந்தா, சிறுத்தைகள் சந்தர்ப்பவாத வேட்டைக்காரர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்மாம்பெரிய பாம்புக்கே கைமா தான் கிளைமாக்ஸ் என்றால், மனிதர்கள் சிக்கினால்....!!?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.