New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/a61.jpg)
தன்னில் யார் பலம் வாய்ந்தது என்பதை நிரூபிப்பதற்காக சண்டையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்
Social Media Viral: கிட்டத்தட்ட 6 அடி உயரத்துக்கு பிண்ணிப் பிணைந்து எழும் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று வீரியத்துடன் மோதிக் கொள்கின்றன
தன்னில் யார் பலம் வாய்ந்தது என்பதை நிரூபிப்பதற்காக சண்டையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்
Tamil Viral Video: இரண்டு பாம்புகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இரண்டு பாம்புகளும் ஒன்றையொன்று சுழன்றுக் கொண்டு சண்டையிடுகிறது.
கிட்டத்தட்ட 6 அடி உயரத்துக்கு பிண்ணிப் பிணைந்து எழும் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று வீரியத்துடன் மோதிக் கொள்கின்றன.
டிவியில் மேட்ச் பார்க்கும் நாய்… வீடியோ ஏன் வைரலாச்சுன்னு இப்போ தான் தெரியுது!
இந்த இரண்டும் ஆண் பாம்புகளும் என்றும், பெண் பாம்பு ஒன்றின் சேர்க்கைக்காக சண்டையிடுவதாக பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிகாரி நந்தா கூறுகையில், இரு பாம்புகளும் தன்னில் யார் பலம் வாய்ந்தது என்பதை நிரூபிப்பதற்காக சண்டையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Rat snakes combat for dominance.
Two male fighting to define their territory & defend their mate. pic.twitter.com/FVn2FIXHte
— Susanta Nanda IFS (@susantananda3) July 31, 2020
நேஷனல் ஜியாகிராபி சேனல் பாம்புகள் குறித்து குறிப்பிடுகையில், பொதுவாக பாம்புகள் சண்டையிட்டால் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. மாறாக ஏதேனும் ஒரு பாம்பு வீழ்ந்து விடும். அவ்வாறு ஒரு பாம்பு வீழ்த்தும் வரையில் மற்றொரு பாம்பு தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்ளுமாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.