New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/a56-1.jpg)
tamil viral video social media viral tamil viral news - தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள், வைரல், தமிழ் வைரல், latest viral video
tamil viral video social media viral tamil viral news - தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள், வைரல், தமிழ் வைரல், latest viral video
Tamil Viral Video: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.... எனும் பழமொழிக்கு கிடைத்த ஒரு குளுகுளு சான்று இது.
ஆற்றின் கரையில் கட்டப்பட்ட கயிற்றில் பெண்கள் இருவர் விளையாடிய கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு பெண் கயிற்றை பிடித்து விளையாடும் போது அறுந்து விழுகிறது. உடனே அந்த பெண் கீழே விழாமல் ஒரு நொடி காற்றில் மிதந்து பின் ஆற்றில் விழுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த பலர் எப்படி அந்த பெண்ணால் காற்றில் மிதக்க முடிந்தது என்று குழப்பத்துடன் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பார்த்து பலர் தங்களது வியப்பையும் பதிவிட்டுள்ளனர். மற்றொருவர் இது அறவியல்பூர்வமாக சாத்தியமா என்று தனது சந்தேகத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும்? தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க!
ஆனால் ஒருவர் மட்டும் அந்த பெண்ணால் எப்படி மிதக்க முடிந்தது என்று விளக்கி உள்ளார். “இது அமானுஷ்யம் எதுவும் இல்லை. அந்த பெண் கைப்பிடியை நழுவ விட்டப்போது அதில் இருந்த கயிறு சற்று தாங்கியது. அதனால், சற்று வித்தியசாமான தோற்றத்தில் உள்ளது. வீடியோவின் முடிவில் பார்த்தால் நன்கு தெரியும்“என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்குறிப்பு: 'குளுகுளு' என்று முதல் பத்தியில் சொன்னது தண்ணீரை!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.