scorecardresearch

இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி? Zoom Call-ல் கணவருக்கு முத்தமிட முயன்ற வீடியோ

Tamil Viral Video : ஜூம் கால் மீட்டிங்கின்போது போது ஒரு பெண் தனது கணவரை முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைராலாகி வருகிறது.

இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி? Zoom Call-ல் கணவருக்கு முத்தமிட முயன்ற வீடியோ

Wife Kiss to Husband At Zoom Call : ஸ்வேதா மீம்ஸ் இணையத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு பெண் ஜூம் கால் மீட்டிங்கின்போது தனது கணவரை முத்தமிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வளலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜூம் கால்சோ வேடிக்கையானது”(Zoon Callso Funny) என்ற தலைப்பில் இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ளார். மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ட்விட் செய்யப்பட்ட வீடியோவில், ஜூம் கால் மீட்டிங்கின் போது ஒரு நபர் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது அந்த நபரின் அறைக்கு வந்த அவரது மனைவி அவருக்கு முத்தமிட கொடுக்க முயல்கிறார். இதனை எதிர்பாராத அந்த நபர், தான் மீட்டிங்கில் இருப்பதை காட்டும் வகையில், தனது மடிக்கணினியை நோக்கி சைகை கான்பிக்கிறார். இதில் அந்த நபரின் முகபாவனைகளை பார்த்து அந்த பெண் புன்னகையில்திளைக்கிறார்.

இந்த வீடியோவை ரசித்து பார்த்த ஆனந்த் மஹிந்திரா “ஹஹா. நான் அந்த பெண்ணை இந்த ஆண்டின் சிறந்த மனைவியாக பரிந்துரைக்கிறேன். மேலும் கணவர் அதிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, முகம் சுழிக்காமல் இருந்திருந்தால், அவர்களை இந்த ஆண்டின் சிறந்த ஜோடியாக  பரிந்துரைத்திருப்பேன், ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் சமூக வளைதளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக, நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். “சில கணவர்கள் வேலையை நினைவில் வைத்துக் கொண்டு இனிமையான தருணங்களை அனுபவிக்க தயங்குகிறார்கள்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil viral video wife kiss to husband for live zoom meeting