scorecardresearch

கோவை பகுதியில் மழைநீரில் அடித்து வந்த அரிதான வெள்ளை நாகம்… வைரல் வீடியோ

வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர்

White Snake
அரிதான வெள்ளை நாகம்

மிகவும் அரிதாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்  நாகப்பாம்பு கோவை மாநகர் பகுதியில் பிடிக்கப்பட்டு மாங்கரை வனப் பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில் வன ஆர்வலர் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil white snake in coimbatore viral video on social media

Best of Express