scorecardresearch

கலைஞர்தான்… கருணாநிதி என என் வாயில் வராது: அண்ணாமலை வைரல் வீடியோ

Tamilnadu News Update : கலைஞர் அவர்கள் ஸ்டாலினுக்கு எந்த பதவியம் எளிதாக கொடுத்துவிடவில்லை. அதேபோல், நான் கலைஞர் அவர்களை கலைஞர் என்றுதான் குறிப்பிடுவேன்

Tamilnadu BJP Head Interview About DMK : தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை தற்போது திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரைலாக பரவி வருகிறது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று கர்நாடகாவில் காவல்துறை அதிகரியாக பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் காவல்துறை பதவியை ராஜினாமா செய்விட்ட அவர், பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜகவில் இணைந்தது முதல் அவரின் ஒவ்வொரு பேச்சுக்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் இவர் பாஜக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து இவர் பேசும் சிறு வார்த்தைகளை கூட நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகினறனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பேசிய பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்டாலின் தனது வாழ்க்கையில் பல அரசியல் போராட்டங்களை சந்தித்து இந்த நிலையை எட்டியுள்ளார். அதனால் வஅரை வாரிசு அரசியல்வாதி என்று சொல்ல முடியாது ஆனால், உதயநிதி வாரிசு அரசியல் அவர்ளின் பலம் என்றும், கனிமொழியின் சிந்தனை முற்போக்கானது என்றும், கலைஞர் தமிழிழுக்கு ஆற்றிய தொற்றின் காரணமாக அவருக்கு கலைஞர் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதி என்ற பெயரை சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளீர்கள் இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, இங்கு யாரும் முட்டாள்கள் இல்லை, நான் படித்தவன். இங்கு அனைவரும் படித்தவர்கள் ஒரு தவறு நடந்தால் அது குறித:து உடனடியாக கூகுளில் தேடிப்பார்ப்பவர்கள் திறமைசாலிகள் இங்கு அதிகம். இப்படி இருக்கும் தமிழகத்தில் அப்படியான எந்த கருத்தையும் சாதாரனமாக சொல்லிவிட்டு சென்றுவிட முடியாது. ஸ்டாலினின் எந்த நடவடிக்கையும் நான் விமர்சித்திருந்தால் அது விவாதத்திற்குரியது. ஆனால் அவர் ஒரு வாரிசு அரசியல்வாதி என்று சொன்னால் அந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்மாட்டார்கள். 40 வருடமாக அரசியலில் இருக்கிறார். ஒரு தேர்தலில் தோற்று, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அப்படி இருக்கும் அவரை எப்படி வாரிசு அரசியல்வாதி என்று முத்திரை குத்த முடியும்.

அது மட்டுமல்லாமல் கலைஞர் அவர்கள் ஸ்டாலினுக்கு எந்த பதவியம் எளிதாக கொடுத்துவிடவில்லை. அதேபோல், நான் கலைஞர் அவர்களை கலைஞர் என்றுதான் குறிப்பிடுவேன். இதற்கு அவர் சாதனைகள் தான் காரணம். ஒருபோதும் நான் கருணாநிதி என்ற அவருடைய பெயரை உச்சரிக்க மாட்டேன். அரசியலில் கருணாநிதியை பார்த்து வளர்ந்தவன் நான். அரசியல் காரணங்களுக்காக அவர விமர்சிப்பது முற்றிலும் மாறுப்பட்டது. அவர் வாழ்நாளை ஆராய்ந்து பார்த்தால், தமிழ்மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன செய்தார் என்பதில் முதலிடத்தில் இருப்பார். அதனால் தான் அவருக்கு கலைஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில், அவரை கருணாநிதி என்று எப்படி அழைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து தொடர்பான அண்ணாமைலையின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அவரது மகன், உதயநிதி ஸ்டாலின் தொடர்பான கருத்துக்களை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த வீடியோ பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu bjp leader annamalai say about stalin and udhaynithi

Best of Express