New Update
/indian-express-tamil/media/media_files/zoryYoTMu4mbJ4RrjU8J.jpg)
கோவை ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி இயங்கி வருகிறது. வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த விடுதிக்கு, அருகே நேற்று 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் உள்ளே புகுந்து முகாமிட்டு இருந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் இது குறித்து மதுக்கரை வனத் துறையினருக்கு கல்லூரி நிர்வாகத்தினார் தகவல் கொடுத்தனர்.
கல்லூரி விடுதியில் நுழைந்த யானை கூட்டம்: போராடி விராட்டிய வனத்துறையினர்; வைரல் வீடியோ!#Coimbatore pic.twitter.com/VphwWsgdKi
— Indian Express Tamil (@IeTamil) September 3, 2024
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வனத் துறையினர் இரண்டு குழுக்களாக செயல்பட்டு காட்டு யானையை கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே விரட்டினர். பின்னர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை செல்லாமல் இருக்க அதனை கண்காணித்து பின்னர் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர்.
இருந்த போதிலும் வனப் பகுதியில் இருந்து மீண்டும் காட்டு யானை வரக் கூடும் என்பதால் அப்பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் தீவிரப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.