New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/08/EeP2wUvh8CJcnQhhoOnc.jpg)
வனத்துறை வாகனத்தின் முன்பு நின்ற ஒற்றை காட்டு யானை : தலையை அசைத்து வர வேண்டாம் எனக் கூறுவது போன்று செல்போன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் உணவு தேடி அப்பகுதி கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் யானைகள், மனிதர்களையும் தாக்கி வருகிறது. யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தமிழக அரசு வனத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை உணவு தேடி கல்லூரியில் ஒவ்வொரு பகுதியாக அலைந்து திரிந்து கொண்டு இருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவத்திற்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது அந்த ஒற்றை காட்டு யானை வனத்துறையின் வாகனத்தை பார்த்து வர வேண்டாம் என்று தலையை அசைப்பது போன்றும், ஆக்ரோசமாக தாக்குவதற்கு முன்னோக்கி வருவது போன்று, நடந்துகொண்டுள்ளது. இந்த காட்சிகளை அந்த கல்லூரி மாணவன் தனது செல்போனில் பதிவு செய்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என் வழியில் குறுக்க வராதீங்க: வனத்துறையினரை எச்சரித்த காட்டு யானை; வைரல் வீடியோ! pic.twitter.com/orIH75UdCp
— Indian Express Tamil (@IeTamil) January 31, 2025
காட்டுக்குள் நீங்க வர வேண்டாம் என்று வனத் துறையினரை திரும்பிச் செல்ல கூறுவது போன்று காட்சி அமைந்து உள்ளது என வன உயிரின ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.