ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கறிக்கடை டோக்கன்கள் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் காலியாக இருந்த ஈரோடு சட்டசபைக்கு கடந்த பிபரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஈவேரா திருமகன் அப்பா ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ்.தென்னரசுவை 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றடித்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை கவரும் விதமாக இலவசமாக கறிவாங்க டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் முடிந்து 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில், இலவசமாக கறி வாங்குவதற்காக டோக்கனுடன் கறிக்கடைக்கு வரவேண்டாம் பணம் கொண்டு வரவும் என்ற மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“