New Update
/
குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த நான்கு காட்டு யானைகள் 10 நாட்களாக அட்டகாசம் செய்து வருவதால் அச்சத்தில் உள்ள கிராம மக்கள் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் கிராம பகுதியில் கடந்த 10 நாட்களாக வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த நான்கு காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இது குறித்து அங்கு உள்ள பொதுமக்கள் வனத் துறைகளுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அங்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டி செல்கின்றனர். ஆனால் மீண்டும் யானைகள் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு வருவதால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சமடைந்து உள்ளனர்.
மெதுவா... மெதுவா போ : ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : நள்ளிரவில் விரட்டிய வனத்துறையினர் : வைரல் வீடியோ#Coimbatore | #elephants pic.twitter.com/IEXYEZVhno
— Indian Express Tamil (@IeTamil) June 13, 2024
அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகளை வனத் துறையினர் விரட்டும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.