Former CM Jayalalitha Speech Rare Video : தமிழக அரசியலில் தனது சிறந்த ஆளுமையால் இன்றளவும் மக்களின் மனதை வென்ற முதல்ராக இருப்பவர் ஜெ.ஜெயலலிதா. ஒரு நடிகைகயாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்ருடன இணைந்து பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கியபோது, அந்த கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு எம்ஜிஆர் இறந்த உடன் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ஜெயலலிதா அதன்பிறகு 1991-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
2011- மற்றும் 2016-ம் ஆண்டு தொடர்ந்து 2 முறை முதல்வராக வெற்றி பெற்ற ஜெயலலிதா, 2016-டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரமடைந்தார். இந்நிலையில், ஜெயலலிதா முதலமைச்சாராக ஆவதற்கு முன்பு கடந்த 1988-ம் ஆண்டு அதிமுகவின் பாப்பா சுப்பிரமணியம் இல்லத் திருமண விழா ஒன்றில் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது
இந்த விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய ஜெயலலிதா, உம்ஜிஆரின் மறைவுக்கு பின் சில சதிகார கும்பல்கள் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்தன. அப்போது நமது பாரத பிரதமர் ராஜூ காந்தி ஒற்றுமையை காக்க வேண்டும் என்று திருமதி ஜானகி அம்மையாருக்கு அறிவுரை கூறினார். ஆனால் இன்று அவர்கள் தனி கோஷ்டியாக இருந்து கொண்டு காங்கிரஸ் முதுகில் குத்திவிடடது. சதி செய்து ஆட்சியை கவிழ்த்துவிட்டார்கள் என் அபாண்டமாக குற்றம் சுமத்தகிறார்கள்.
பெரிய பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை, குறை கூறி தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு, அவர்கள் சென்றிருக்கிறார்கள். இது உண்மையிலேயே மிகவும் வருந்த தக்க ஒரு செயலாகும். ஏனென்றால் இரு புரட்சித்தலைவர் அவர்களின் கொள்கை அல்ல. இது அவர் காட்டிய வழியும் அல்ல. காங்கிரஸ் எப்படி சதி செய்ததாக கூற முடியும், எப்படி சூழ்ச்சி செய்ததாக கூற முடியும்? எப்படி முதுகில் குத்தியதாக கூற முடியும்.
புரட்சித்தலைவர் அவர்களின் மறைவுக்கு பின்னால் அவருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக சம்பாதித்து வைத்திருந்த கோடிககணக்காக பணத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்து, ஆடுமாடுகளை விலைபேசி பேரம் பேசி வாங்குவதுபோல், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வலுக்கட்டாயமாக யாருமே விரும்பாத ஒரு மைனாரிட்டி ஆட்சியை அமைக்க முயன்றார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள்.
அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் புரட்சித்தலைவர் அவர்களின் கடடளைப்படி திருமதி ஜானகி அம்மையார் நடந்துகொள்கிறார் என்றால் அவர் அரசியல் பக்கமே வந்திருக்க கூடாது. அது என்றைக்குமே புரட்சித்தலைவர் அவர்கள் விரும்பாத ஒன்று. புரட்சித்தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கும்வரை ஜானகி அம்மையார் என்றைக்குமே கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது கிடையாது.
எந்தவகை அரசியல் ஈடுபாடும் அவருக்கு கிடையாது. இதனை புரட்சித்தலைவர் அவர்களே விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாது புரிதல் இல்லை என்பது அவருக்கு தெரியும். அவர்கள் அரசியலில் ஈடுபட்டால் புரட்சித்தலைவர் அவர்களின் பெயரையே கெடுத்துவிடுவார்கள் என்பது அவருகே தெரியும். இதனால் தான் கடைசிவரை புரட்சித்தலைவர் ஜானகி அம்மையாரை அடிப்படி உறுப்பினராக கூட கட்சியில் அனுமதிக்கவில்லை.
அப்படி இருந்தவர் இன்றைக்கு காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது சதி செய்து ஆட்சியை கவிழ்த்துவிட்டது என்றால், காங்கிரஸா அப்படி செய்தது. இது மக்கள் செய்தது. மக்கள் ஜானகி அம்மையாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு காங்கிரஸ் என்ன செய்யும். இப்படி யாருமே ஏற்றுக்கொள்ளாத ஒருவரை, எந்த தகுதியும் இல்லாத ஒருவரை எப்படி காங்கிரஸ் ஆளவைக்க முடியும்.
முதல்வராக இருக்கும்போது புரட்சித்தலைவர் அவர்கள் டெல்லி சென்றபோது பிரதமர் கூறியது என்ன? புரட்சித்தலைவர் அவர்களின் உண்மையாக ஒன்றுபட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற் கழகத்தை காங்கிரஸ் என்றைக்கும் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். அப்போதும் நீங்கள் ஒற்றுமையை காக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
அன்னை இந்திரா காந்தி அவர்களின் மறைவுக்கு பின்னால் அவரது புதல்வர் தாயாரின் விருப்பப்படியே புரட்சித்தலைவர் அவர்களின் சிகிச்சைக்காக தேவையான எல்லா ஒத்துழைப்பையும் கொடுத்தார். அனைத்து உதவிகளையும் செய்தார். இப்படி புரட்சித்தலைவர் அவர்களின் உயிரை காப்பதற்காக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியும், ராஜூ காந்தியும். எத்தனையே உதவிகளை செய்துள்ளனர்.
இதையெல்லாம் நாம் மறந்தோமானால் நாம் மனிதர்களே அல்ல. 1984-ல் நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த தோழமை கட்சி காங்கிரஸ், இந்த கட்சியின் கூட்டோடுதான் தேர்தலை சந்தித்தோம். அப்போது மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மீதான அனுதாபமும் நமது வெற்றிக்கு உதவியாக இருந்தது. அதை யாரும் மறந்துவிட முடியாது. புரட்சித்தலைவர் அவர்கள் காங்கிரஸ் கட்சியை தனது தோழமை கட்சியாக என்றைக்குமே ஆதரித்திருக்கிறார்.
ஆனால் புரட்சித்தலைவர் அவர்கள் இறந்த மறுகனமே தங்களது தவறான எண்ணத்திற்கு துணைபோகவில்லை என்பதற்காக, காங்கிரஸை உதாசினப்படுத்தி கேவலமாக திட்டி, முதுகில் குத்திவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி.புரட்சித்தலைவர் அவர்கள் எந்த கருணாநிதியை எதிர்த்தாரோ அவரிடமே போய் புரட்சித்தலைவர் அவர்களின் மானத்தையே அடகு வைத்துவிட்டார்கள் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.