New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/New-Project-2019-12-28T161114.393.jpg)
Tamilnadu police stopped BMW bike, பி.எம்.டபில்யூ பைக், தமிழக போலீசார், police inquiries about bike, BMW gs r 1200 adventure, BMW bike
மும்பையில் இருந்து மதுரைக்கு ஒரு நபர் ஓட்டிவந்த பைக்கைப் பார்த்து வியந்துபோன தமிழக போலீசார், பல இடங்களில் அந்த பைக்கை நிறுத்தி அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
Tamilnadu police stopped BMW bike, பி.எம்.டபில்யூ பைக், தமிழக போலீசார், police inquiries about bike, BMW gs r 1200 adventure, BMW bike
மும்பையில் இருந்து மதுரைக்கு ஒரு நபர் ஓட்டிவந்த பி.எம்.டபில்யூ பைக்கைப் பார்த்து வியந்துபோன தமிழக போலீசார், பல இடங்களில் அந்த பைக்கை நிறுத்தி அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
பொதுவாக தமிழக போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் வருபவர்களை நிறுத்தி ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் ஆவணங்களைக் கேட்பது என்பது வழக்கம்தான். ஆனால், மும்பையில் இருந்து மதுரைக்கு ஒருநபர் ஓட்டிவந்த பி.எம்.டபில்யூ பைக்கை தமிழக போலீசார் பல இடங்களில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த பைக்கைப் பார்த்து வியந்துபோன போலீசார் பைக்குடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
&feature=youtu.be
தமிழகத்தில் இந்த பைக்கை பல இடங்களில் நிறுத்தி புகைப்படம் கொள்ளும் அளவுக்கு அந்த பைக் என்ன அதிசயமா என்றால் நம்ம ஊர்க்காரர்களுக்கு இந்த பைக் அதிசயம்தான். ஏன் என்றால், அந்த பைக்கின் வடிவமைப்பும், தோற்றமும் பலரையும் வியக்க வைக்கத்தான் செய்கிறது. அதைவிட, அந்த பைக்கின் விலை விலையும் கேட்பவர்கள் பலரையும் மலைக்கவைக்கிறது. அந்த பிரம்மாண்ட பைக்கின் விலை ரூ.30 லட்சம் என்று அந்த பைக்கை ஓட்டிவரும் நபர் கூறுகிறார்.
இந்த விலை உயர்ந்த பைக்கை ஓட்டிவரும் நபர் அதனை விடீயோ செய்து யூ டியுப்பில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில், தமிழகத்தில் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தும் போலீசார் அவரிடம் ஆவணங்கள் கேட்ட பின்னர், வாழ்க்கையில் எப்போது 30 லட்சம் ரூபாய் பைக் பார்க்கப் போகிறோம் என்று கூறி அந்த பைக்குடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். இதனால், இந்த பைக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.