இணையதளத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் சாதாரனமாக நிகழ்வும் சில சம்பவங்கள் கூட சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
Advertisment
இதற்கு முக்கிய காரணம் மீம்ஸ் என்று சொல்லலாம். நாட்டில் எது நடந்தாலும் அதற்கு சரியான படங்களை தேர்வு செய்து மீம்ஸ் போடுவதில் நெட்டிசன்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு தீனி போடும் வகையில் நாள்தோறும் பல நிகழ்வுகள் அரங்கேறும். அதேபோல் பண்டிகை காலம் என்றால் போன வரும் 90-ஸ் குழந்தைகள் என பல வித்தியாசமாக மீம்ஸ்கள் வருவது உண்டு.
அந்த வகையில் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் பொங்கல் பண்டிகையை கையில் எடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது வேலையை தொடங்கியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil