New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/08/JSVVnzR0Muj7pLQlMKN1.jpg)
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேலூர் மாவட்ட மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் எழுத்துப்பிழை இருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின், முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடர்பான அறிவிப்பின்போதே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று கூறியிருந்தார். அதன்படி அடுத்து 2026-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், த.வெ.க-வினர் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் கட்சியின் தலைமையும், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது, அணிகள் குறித்த அறிவிப்பு என அவ்வப்போது தங்கள் பணிகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து விஜய் தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விஜயின் த.வெ.க தனித்து போட்டியிடுமா அல்லது, கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அப்படி கூட்டணி அமைத்தால் எந்த கட்சியுடன் இணையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எழுத்துப்பிழைய காட்டி.. Issues aa கடந்து போயிடலாமா?
— CHE RAM (@A_n_b_e_S_i_vam) March 8, 2025
திமுகவின் அமைச்சர்களுக்கு முதலில் அவர்களோட பெயர் தமிழில் எழுத தெரியுமா
— Arun P (@Tuti_thalapathy) March 8, 2025
கட்சிப் பெயரையே இலக்கண பிழையுடன் எழுதிய தற்குறி கூட்டம் தானே 😂😂😂
— Sivan🖤❤️ (@SSivanDMK) March 8, 2025
யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பிக்கும் தற்குறியை தலைவனாக கொண்ட கூட்டம் அப்படி தான் இருக்கும்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் இறங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில், வேலூரில், த.வெ.க மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்காக த.வெ.க சார்பில் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
மக்களே இங்க பாருங்க,அப்பாவ மாமனாரா மாத்திட்டானுங்க pic.twitter.com/bIGHxJ2Uew
— TVK Sleepercell (@JmViswanathan) March 8, 2025
அரசியலும் தெரியாது
— ANTO JABIN (@AntoJabin) March 8, 2025
தமிழும் தெரியாது
ஆனால் 2026 நேர முதலமைச்சர் 😂😂😂
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, பெரிய சமுதாய பிரச்சினைகளை, எழுத்து பிழைகள காட்டி எப்படி மடை மாற்றம் செய்கிறான் இந்த புதிய தலைமுறை காரன்...
— Shanth Kandiah (@Shanth_Kandiah) March 8, 2025
தமிழக வெற்றி கழகம். பேர வச்கிட்டு. இப்படி தமிழில் எழுதுவதே பிழை என்றால்,....
— சக்தி வேல் (@Sakthiv17272297) March 8, 2025
இந்த பேனரில், தவறிய என்பதற்கு பதிலான தவரிய என்றும், கண்டித்து என்பதற்கு பதிலாக கன்டித்து என்றும், எழுத்துப்பிழைகள் உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தமிழை சரியாக எழுத தெரியவில்லை என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.