வாகனத்தை தாக்கும் கொம்பன் கபாலி; அச்சத்தில் சுற்றுலா பயணிகள்: வைரல் வீடியோ

காட்டு யானைக் கூட்டங்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

காட்டு யானைக் கூட்டங்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Eleph

கோவை மாவட்டம் வால்பாறை தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும் ஊட்டி கொடைக்கானல் பிறகு வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் பிற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா வருகின்றனர் தற்போது பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிக அளவில் வால்பாறையில் உள்ள கூலாங்கள் ஆறு வெள்ள விநாயகர் கோவில் நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை சோலையார் அணை சின்னக்கல்லார் போன்ற இடங்களுக்கு சென்று கண்டு களிக்கின்றனர். தற்போது காட்டு யானைக் கூட்டங்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றலாப்பயணிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் வனத்து விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கொம்பன் கபாலி வாகனங்களை துரத்துவதும் சாலையில் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. மேலும் சுற்றுலா வரும் பயணிகளின் நான்கு சக்கர வாகனங்களை தாக்கி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment
Advertisements

கேரளா வனத்துறையினர் வாகன ரோந்து மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள மளுக்குப்பாறை ஆனை மூக்கு என்ற இடத்தில் திடீரென வந்த கொம்பன் கபாலி சுற்றுலா பயணி வந்த வேனை திடீரென தாக்கியதில் முன்புறம் கண்ணாடி உடைந்து நிலையில் ஆக்ரோசத்துடன் சாலையை விட்டு தள்ளியது சுற்றுலா பயணிகள் கூச்சல் யிட்டதின் பேரில் யானை அப்பகுதி விட்டு விலகி வனப்பகுதிக்குள் சென்றது.

அப்பகுதிக்கு வந்த கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர் கொம்பன் கபாலி சுற்றுலா வாகனங்களை தாக்குவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர் .

Tamil Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: