விஜய், அஜித் படங்களையும் விட்டு வைக்காத அகில இந்திய சூப்பர் ஸ்டார் சிவா!

 இந்த அளவிற்கு யாரைலையும் வச்சி செய்ய் முடியாது  என்பது தான் 

இன்று  வெளியாகி இருக்கும்  தமிழ் படம் 2   பற்றித்தான்  கோலிவுட் முதல்  டோலிவுட் வரை பேச்சு.  ”சிவா என்கிற நான்” என்று  ஆரம்பித்த படத்தின்  டீசரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட வில்லை. உச்ச நடிகர்களின் படங்கள் தொடங்கி பட்ஜெட் படங்கள், மெகா பட்ஜெட் படங்கள் என பாராபட்சம் இல்லாமல்   போஸ்டர் வழியாக கலாய்த்த  செயல் தான் இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும்  ப்ரோமோஷன்.

எப்படி இருக்கும்? என்ன கதையாக இருக்கும்? கதை இருக்குமா?  இல்லையா? என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள்  மனதில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றனர்.  குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் படங்களின்  ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட  விட்டு வைக்காமல் படக்குழு  செய்த ஒரு செயல் இருக்குமே…

சமூகவலைத்தளத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்  ரஜினி,  விஜய், அஜித் ரசிகர்கள் கதறி அழாத குறை தான்.   இந்த அளவிற்கு யாரைலையும் வச்சி செய்ய் முடியாது  என்பது தான்  இந்த போஸ்டர்களை  பார்த்த ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close