உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் தரையில் படுத்திருக்கும்போது, அவரது மாணவர்கள் அவருக்கு காற்றோட்டமாக இருக்க விசிறி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும், பள்ளி நிர்வாகம் இந்த வீடியோ தவறானது என்று கூறியதுடன் அங்கே என்ன நடந்தது என்பதையும் தெளிவுபடுத்தியது.
जब शिक्षक ही ऐसे होंगे तो शिक्षण कैसा होगा,भयंकर गर्मी से निजात पाने को मासूमों से हवा कराती मास्टरनी साहिबा, 😤👩🏫
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) July 27, 2024
अलीगढ़ में शिक्षिका के द्वारा मासूम बच्चों से उमस भरी गर्मी में पंखा कराने का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है. यूपी के अलीगढ़ के धनीपुर ब्लॉक के… pic.twitter.com/AHud4DaLnE
பள்ளி ஆசிரியை மயங்கி கிடக்கிறார், ஒரு சில மாணவர்கள் அவருக்கு மாறி மாறி விசிறி விடுகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள @Gluzar_sahab என்ற எக்ஸ் பயனர், “ஆசிரியர்களே இப்படி இருக்கும்போது, கற்பித்தல் எப்படி இருக்கும், வெயிலில் இருந்து விடுபட அப்பாவி குழந்தைகளை காற்றை சுவாசிக்க வைக்கிறார் இந்த ஆசிரியை. அலிகாரில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியை வெப்பமான வெயிலில் அப்பாவி குழந்தைகளை விசிறி விட வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உ.பி., அலிகார், தானிபூர் தொகுதியில் உள்ள கோகுல்பூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வகுப்பறையில் ஆசிரியை படுத்திருக்கும்போது மாணவர்கள் விசிறி விடும் வீடியோ சமூக ஊடகங்களில் கோபத்தைத் தூண்டிய உடனேயே, அலிகார் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ராகேஷ் சிங் இந்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தினார். இந்த ஆசிரியை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து விழுந்தார். “ஆசிரியை தூங்கும்போது அவருக்கு மாணவர்கள் விசிறினார்கள் என்பது உண்மையல்ல என்று விசாரணையில் கண்டறியப்பட்டது; ஆசிரியை நாற்காலியில் இருந்து விழுந்துவிட்டார், அவருக்கு முதலுதவி தேவை என்று குழந்தைகள் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தனர” என்று ராகேஷ் சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உத்தரபிரதேசத்தின் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் வகுப்பு நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததைப் போன்ற ஒரு வீடியோ இந்த மாத தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, ஆசிரியர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக பள்ளி முதல்வர் தெளிவுபடுத்தியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.