Advertisment

இது புதுவிதமான ட்ராலி ஷூட்... குழந்தைகள் சிரிப்பை வித்தியாசமாக படம்பிடித்த டீச்சர்: வைரல் வீடியோ

இந்த அழகான வீடியோவைப் பார்ப்பவர்கள் அனைவரும், ஆசிரியையின் முயற்சியையும் குழந்தைகளின் சிரிப்பையும் பார்த்து மனதுக்குள் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார்கள். நீங்களும் பாருங்கள், மகிழ்ச்சி அடையுங்கள். 

author-image
WebDesk
New Update
teacher video

ஆசிரியை வகுப்பறையில் குழந்தைகளின் சிரிப்பை வித்தியாசமான முறையில் நேர்த்தியாக படம்பிடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது செல்போனில், மழலை மாணவர்களின் சிரிப்பை வித்தியாசமான முறையில் நேர்த்தியாக படம்பிடித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழகத்தில் உள்ள ஒரு மாண்டிசோரி பள்ளியின் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பறையில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்பை, சினிமாவில் ட்ராலியில் படம்பிடிப்பது போல, டிராலி இல்லாமல் வித்தியாசமான முறையில் குழந்தைகளை சிரிக்க வைத்து நேர்த்தியாக வீடியோ படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ ஏராளமான பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்து மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ட்ராலி இல்லாமல் ட்ராலி ஷூட் எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.  தனது மாணவர்களின் மகிழ்ச்சியான சிரித்த முகங்களை வீடியோ படம் பிடிக்க இந்த ஆசிரியை குழந்தையாகவே மாறியுள்ளார். குழந்தைகள் பள்ளியின் ஹாலில் உள்ள படிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு ஆசிரியை அமர்ந்திருக்கிறார். குழந்தைகள் உற்சாகமாக சிரிக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பை வீடியோ படம்பிடிக்கும் ஆசிரியை கடைசி படியில் படுத்தபடி, ஒரு கையில் செல்போனில் வீடியோவைப் பதிவு செய்கிறார். அவருடை காலைப் பிடித்து மற்றொரு ஆசிரியை டிராலி போல இழுத்துச் செல்கிறார். இதைப் பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியில் குதூகலமாக சிரிக்கிறார்கள். ஆசிரியை வித்தியாசமான முறையில் படம்பிடித்துள்ள, குழந்தைகள் சிரிக்கும் இந்த நேர்த்தியான வீடியோ சமூக வலைதளங்களில் 19 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி வைரலாகி வருகிறது.

குழந்தைகளை சிரிக்க வைத்து அவர்களுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறி வித்தியாசமான முறையில் நேர்த்தியாக வீடியோ படம்பிடித்துள்ள அந்த ஆசிரியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், அந்த ஆசிரியைக்கு தலைவணங்குகிறேன். அவர் இந்த வீடியோ நடந்துகூட எடுத்திருக்கலாம். ஆனால், குழந்தைகளின் சிரிப்புக்காக அழகாக இப்படி செய்திருக்கிறார். இந்த வீடியோ மிகவும் அழகாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அழகான வீடியோவைப் பார்ப்பவர்கள் அனைவரும், ஆசிரியையின் முயற்சியையும் குழந்தைகளின் சிரிப்பையும் பார்த்து மனதுக்குள் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார்கள். நீங்களும் பாருங்கள், மகிழ்ச்சி அடையுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment