நாயுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட இளம் பெண் - முகத்தில் 40 தையல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Teen's photoshoot goes wrong when dog bites face leaving her 40 stitches - நாயுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட இளம் பெண் - முகத்தில் 40 தையல்

Teen's photoshoot goes wrong when dog bites face leaving her 40 stitches - நாயுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட இளம் பெண் - முகத்தில் 40 தையல்

சிலர் வளர்ப்பு பிராணிகளை வைத்து அதனுடன் செல்பி எடுத்து சமூக தளங்களில் பதிவேற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். முழுக்க முழுக்க காலனாவுக்கு தேறாத லைக்குகாகவும், கமெண்ட்டுகளுக்காகவும் தான் இவையெல்லாம். செல்ல பிராணிகளுடன் செல்பி எடுக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisment

"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...

லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

Advertisment
Advertisements

publive-image

அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

publive-image

இது தொடர்பாக லாரா சன்சோன் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா? எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

publive-image

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: