telangana government, best constable award, arrest for bribery, bribery case, சிறந்த கான்ஸ்டபிள் விருது, லஞ்சம், கைது, தெலுங்கானா
சிறந்த போலிஸ் கான்ஸ்டபிள் விருது வென்றவர், மறுநாளே லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் போலீஸ் ஸ்டேசனில் கான்ஸ்டபிள் ஆக இருப்பவர் பல்லே திருப்பதி ரெட்டி. நாட்டின் 73வது சுதந்திரதினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பதி ரெட்டிக்கு, சிறந்த போலீஸ் கான்ஸ்டபிள் விருது வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மணல் வியாபாரம் செய்து வரும் முதாவத் ரமேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசிடம் திருப்பதி ரெட்டி குறித்து புகார் அளித்தனர். தன் மீது திருட்டு வழக்கு போடப்படும் என்று திருப்பதி ரெட்டி அச்சுறுத்துவதாகவும், வழக்கு போடாமல் இருக்க லஞ்சமாக ரூ.17 ஆயிரம் பெற்றுக்கொண்டதாக அந்த புகார் மனுவில் முதாவத் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதில் உண்மைத்தன்மை இருந்ததை தொடர்ந்து, திருப்பதி ரெட்டியை கைது செய்து சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
சிறந்த போலீஸ் கான்ஸ்டபிள் விருது வாங்கிய போலீஸ், மறுநாளே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் சிலவற்றை இங்கு காண்போம்…
That's the real India … Cancer corruption is ruining the country.