Advertisment

தெலங்கானாவில் கனமழை: நீரில் மூழ்கிய வீடுகள், கரைபுரளும் கோதாவரி, அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளம்: வைரல் வீடியோ

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, தெலங்கானாவில் திங்கள்கிழமை அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Andhra rains

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, தெலங்கானாவில் திங்கள்கிழமை அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. (Image source: X)

தெலங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருவதால், வெள்ள நீரில் மூழ்கிய வீடுகள், கரைபுரண்டு ஓடும் கோதாவரி ஆறு மற்றும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தடங்கள் போன்ற ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: As rain in Telangana wreaks havoc, videos of destruction shared on social media

கனமழைக்கு மத்தியில், கேசமுத்திரம் மற்றும் மஹபூபாபாத் இடையே உள்ள ரயில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோவில் காட்டுகிறது. இதனால், விஜயவாடாவிலிருந்து வாரங்கல், டெல்லியிலிருந்து விஜயவாடா மற்றும் வாரங்கல்லில் இருந்து விஜயவாடா செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வைரல் வீடியோவைப் பாருங்கள்:

மற்றொரு வீடியோவில், நாகர்கர்னூல் ஆற்றில் மூழ்கிய ஒருவரை இரண்டு தெலங்கானா போலீசார் காப்பாற்றுவதைக் காணலாம். பலத்த நீரோட்டத்திற்கு மத்தியில் ஒரு வாகனத்தைப் பிடித்துக் கொண்டு அந்த நபரை வெளியே இழுக்கும் போலீஸ்காரர்களும் மற்றொரு நபரும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளனர்.

வைரல் வீடியோ:

சவுத் ஃபர்ஸ்ட் (@TheSouthFirst) எக்ஸ் பக்கத்தில்,  மாநிலத்தின் மஹபூபாபாத் மாவட்டத்தில் பல வீடுகள் தண்ணீரீல் மூழ்கி இருப்பதைக் காட்டும் வீடியோக்களின் தொகுப்பை வெளியிட்டது. “மஹபூபாபாத் மாவட்டங்களில் கனமழை காரணமாக, பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மாநிலத்தின் பல இடங்களில் சாலைகள் மற்றும் சிறு பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 200 மிமீ மழை பெய்து வருகிறது” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ: 

தெலங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, தெலங்கானாவில் திங்கள்கிழமை அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment