Advertisment

காஷ்மீர் ஆன தெலுங்கானா… திடீர் ஆலங்கட்டி மழை; பனி மூடிய சாலை: வீடியோ

சாலை முழுவதும் பனிக்கட்டி மூடியிருப்பதைப் பார்த்து இது காஷ்மீர் என்று நினைத்து இருப்பீர்கள். ஆனால், இது காஷ்மீர் அல்ல தெலுங்கானா மாநிலம்தான். தெலுங்கானாவில் விகாராபாத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை பெய்ததால் பனி மூடி காட்சி அளிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Unseasonal hailstorm hits Telangana, Vikarabad hail, climate change, Vikarabad crop damage, hailstorm, indian express

தெலுங்கானா விகாராபாத் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை

சாலை முழுவதும் பனிக்கட்டி மூடியிருப்பதைப் பார்த்து இது காஷ்மீர் என்று நினைத்து இருப்பீர்கள். ஆனால், இது காஷ்மீர் அல்ல தெலுங்கானா மாநிலம்தான். தெலுங்கானாவில் விகாராபாத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை பெய்ததால் பனி மூடி காட்சி அளிக்கிறது.

Advertisment

எல்லோரும் இந்த படத்தில் சாலை முழுவதும் பனிக்கட்டி மூடியிருப்பதைப் பார்த்து காஷ்மீர் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால், இது காஷ்மீர் இல்லை. தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக திடீரென பெய்த ஆலங்கட்டி மழையில் கொட்டிய பனிக்கட்டிகளால் சாலை முழுவதும் பனிக்கட்டி மூடி காட்சி அளித்தது. இது பார்ப்பதற்கு காஷ்மீரில் பனிக்கட்டிகளால் மூடிய சாலை போல காட்சி அளித்தது.

இந்த திடீர் ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தாலும் பருவமழை பொய்த்துப்போன அப்பகுதியில், வழக்கத்திற்கு மாறான இந்த ஆலங்கட்டி மழையால் பயிர்கள் சேதமடைந்தன.

மிகவும் அரிதான காலநிலை நிகழ்வில், தெலுங்கானாவில் உள்ள விகாராபாத் நகரத்தை பனிக்கட்டிகளால் வெண்மையாக்கும் அளவுக்கு பலத்த ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் பெய்த ஆலங்கட்டி மழையின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளூர்வாசிகள் ட்வீட் செய்துள்ளனர்.

“சாலைகள் வெள்ளை நிறமாக மாறியுள்ளது. இது சுவிட்சர்லாந்து அல்ல. தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மார்பள்ளேயில் ஆலங்கட்டி மழை பொழிந்தது” என்று ஒரு ட்விட்டர் பயனர் எழுதியுள்ளார். அவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு சாலை ஆலங்கட்டி மழையில் கொட்டிய பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது.

மற்றொரு ட்விட்டர் பயனர், வயல்களிலும் சாலையோரங்களிலும் குவிந்துள்ள ஆலங்கட்டிக் குவியல்களைக் காட்டும் படங்களின் தொகுப்பை ட்வீட் செய்து, “ஒரு கணம், நான் இதை காஷ்மீர் என்று தவறாக நினைத்துக்கொண்டேன், ஆனால் அது உண்மையில் எங்கள் சொந்த ஊர் விகாராபாத்” என்று பதிவிட்டுள்ளார்.

“சாலைகள் வெள்ளை நிறமாக மாறியது. இது சுவிட்சர்லாந்து அல்ல. தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மார்பள்ளே என்ற இடத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.” என்று ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு அற்புதமான தருணம், நான் இதை அமெரிக்கா, கனடா, காஷ்மீர் என்று தவறாக நினைத்துக்கொண்டேன். ஆனால், இது உண்மையில் எங்களின் சொந்த ஊர் விகாராபாத் விகாராபாத்” என்று இன்னொரு ட்விட்டர் பயனர் ட்வீட் செய்துள்ளார்.

கடும் கோடையில் இருந்து ஓய்வு! ஹைதராபாத்தில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது! மேலும் விகாராபாத் மோமின்பேட்டையில் ஆலங்கட்டி மழை பெய்தது என்று ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.

விகாராபாத்தை காஷ்மீர் அல்லது சுவிட்சர்லாந்துடன் ஒப்பிட்டு பலர் விசித்திரமான காலநிலையைக் கண்டு மகிழ்ந்த நிலையில், ஆலங்கட்டி மழையால் அப்பகுதியில் பெரும் பயிர் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பருவமழை பொய்த்ததால் மக்காச்சோளம், மா, பப்பாளி, பச்சைப்பயறு பயிரிடும் விவசாயிகளின் துயரம் மேலும் அதிகரித்துள்ளது. இவற்றில் பல பயிர்கள் ஏற்கனவே முற்றிய நிலையில் இருந்தன.

சமீபகாலமாக பனிப்பொழிவு இல்லாத இடத்திலும் பனிப்பொழிவு கண்டது இந்தியா மட்டுமல்ல. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பல பகுதிகள் பனி மற்றும் பனிப்புயல்களைக் கண்டன. என்று பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தபோது சான் பிரான்சிஸ்கோ அதன் 132 ஆண்டுகளில் இல்லாத குறைந்த மார்ச் வெப்பநிலையை முறியடித்தது. வெயில் காலநிலை மற்றும் பனை மரங்களுக்கு பெயர் பெற்ற நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் அரிய பனிப்பொழிவையும் கண்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Telangana Trending Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment