தெலங்கானாவைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் ரீல்ஸ் மோகத்தால் பாம்பை தந்து வாயில் கடித்தபடி சாகசம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த இளைஞர் அந்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சமூக வலைதளங்களில் வியூஸ், லைக்ஸ், கமெண்ட்ஸ்களப் பெற வேண்டும் என்ற ரீல்ஸ் மோகத்தில் என்னென்னவோ செய்கிறார்கள். ஆபத்தான செயல்களையும் செய்கிறார்கள். இவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கைகளை விடுத்தாலும், இவர்கள் பயனில்லாத சாகசங்களில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள்.
Telangana Youth Dies After Cobra Bite While Filming Video Stunt in Kamareddy
— Sudhakar Udumula (@sudhakarudumula) September 6, 2024
In a video reel stunt gone wrong in Desaipet, Banswada mandal of Kamareddy district in Telangana , a young man died after being bitten by a cobra while filming a video stunt. The victim, Shiva, had been… pic.twitter.com/NzWd5sNmMV
அந்த வகையில், தெலங்கானாவைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் ரீல்ஸ் மோகத்தால் பாம்பை தந்து வாயில் கடித்தபடி சாகசம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த இளைஞர் அந்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டத்தின் பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட்டையில் இந்த இளைஞர் சிவா. அப்பகுதியில் 6 அடி நீள பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்து உதவிக்கு அழைத்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சிவா பாம்பை பிடிக்க முன் வந்து பிடித்தார். ஆனால், அவர் பாம்புடன் ஆபத்தான முறையில் சாகசம் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். மற்றவர்கள் அந்த பாம்பு மிகவும் விஷம் மிக்க பாம்பு என்று எச்சரித்தபோதும், அவர்களைப் பொருட்படுத்தாத, மற்றவர்கள் போட்டோ, வீடியோ எடுக்கத் தொடங்கியதும், சிவா அந்த பாம்பை தனது வாயில் கோரைப் பற்களால் கடித்துக்கொண்டு பிடித்தபடி போஸ் கொடுத்தார்.
சிவா அந்த பாம்புடன் பல சாகசங்களை செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ஆனால், அவர் அந்த பாம்பை வாயில் வைத்திருக்கும் போது, அந்த பாம்பு அவரைக் கடித்ததை உணரவில்லை. சிவா மயங்கி விழுந்தபோதுதான் பாம்பு கடித்தது மற்றவர்களால் கவனிக்கப்பட்டது.
உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாம்பை வாயில் கடித்து சாகசம் செய்த இளைஞர் பாம்பு கடித்து பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.