சுவாமி ஊர்வலத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய அர்ச்சகர்கள்; இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ

ஆந்திரவில் சுவாமி ஊர்வலத்தில் அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது.

author-image
WebDesk
New Update
priests break dances

பொதுவாக கோயிலில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு பூஜை செய்வதையே பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு அர்ச்சகர்களின் பிரேக் டான்ஸ் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரவில் சுவாமி ஊர்வலத்தில் அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. பொதுவாக கோயிலில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு பூஜை செய்வதையே பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு அர்ச்சகர்களின் பிரேக் டான்ஸ் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தாசா கிராமத்தில் ஸ்ரீ வாசுதேவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பிப்ரவர் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 16அது பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது. 

இந்த திருவிழாவில், பாரம்பரிய பாடல்கள், பக்தி இசையுடன் தேர் ஊர்வலம் நடத்தப்பட்டது. சுவாமி தேர் இந்த ஊர்வலத்தின் போது, பெருமாள் சிலையை சுமந்து சென்ற அர்ச்சகர்கள், திடீரென பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தினர். சில அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்பினர். அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடியதைப் பார்த்த சுற்றி இருந்த பக்தர்கள் ஆரவாரம் செய்து அர்ச்சகர்களை உற்சாகப்படுத்தினர். 

Advertisment
Advertisements

பொதுவாக கோயிலில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு பூஜை செய்வதையே பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு அர்ச்சகர்களின் பிரேக் டான்ஸ் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சகர்கள் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அர்ச்சகர்களின் பிரேக் டான்ஸ் டான்ஸ் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அர்ச்சகர்களின் பிரேக் டான்ஸ் வீடியோவைப் பார்த்தவர்கள், சிலர் மகிழ்ச்சியுடன் பாராட்டியும் சிலர் அர்ச்சகர்கள் கோயில் மரபுகளை அவமரியாதை செய்துவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: