/indian-express-tamil/media/media_files/2025/09/17/terrified-bull-1-2025-09-17-15-05-40.jpg)
இந்தக் காளை உள்ளூர் விவசாயி ஷேக் கபூருக்கு சொந்தமானது.
தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தின் நிரலா கிராம மக்கள் இந்த வாரம் ஒரு அசாதாரண காட்சியைக் கண்டனர். தெருநாய்கள் கூட்டத்தைக் கண்டு பயந்த ஒரு காளை, தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் கூரை மீது ஏறிநின்றது. உள்ளூர்வாசிகள் கூறுகையில், அந்த காளைஅருகில் இருந்த பாறைகள் மீது ஏறி கூரைக்குச் சென்றது, சாதாரண நாளாக இருந்தும் யாரும் எதிர்பாராத ஒரு காட்சி இது. காளை கால் இடறி கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்படுமோ என மக்கள் பயந்ததால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்தக் காளை, உள்ளூர் விவசாயி ஷேக் கபூருக்குச் சொந்தமானது என்றும், வழக்கம் போல் அதை தன் வீட்டிற்கு வெளியே கட்டியிருந்தார் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து, ஒரு சில தெருநாய்கள் அந்த காளையின்மீது பாய்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பயத்தில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற காளை, கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு பாதுகாப்பு தேடி ஓடியது, இறுதியில் வீட்டின் கூரை மீது ஏறி நின்றது. இந்த வினோதமான தருணத்தை கிராம மக்கள் தங்கள் செல்போனில்படம் பிடித்தனர். மேலும், அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வீடியோவைப் பாருங்கள்:
तेलंगाना के आदिलाबाद जिले के निराल गांव में एक अनोखी घटना देखने को मिली, जहां आवारा कुत्तों के झुंड से बचने के लिए एक सांड घर की छत पर चढ़ गया। अचानक हुए इस नजारे से ग्रामीण हैरान रह गए। बताया गया कि शेख गफूर नामक किसान का सांड कुत्तों के हमले से घबराकर रस्सी तोड़कर भागा और… pic.twitter.com/e6cCrhW7IA
— KHABAR FAST (@Khabarfast) September 16, 2025
வீடியோவில்காளை அசையாமல் நின்று, கிராமப்புற வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிகப்பு ஓடுகளால் கட்டப்பட்ட சாய்வான கூரையின் மீது, மிரண்டுபோய் குழப்பத்துடன் நிற்பதைக் காட்டுகிறது. அதுபெரியஉருவத்திலும்அதிகஎடையுடன்இருந்தபோதிலும், வீட்டிற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டது. இந்தியா டுடே செய்தியின்படி, கிராம மக்கள் கயிறுகள் மற்றும் கவனமான உத்திகளைப் பயன்படுத்தி, பல மணி நேர முயற்சிக்குப் பிறகு, அந்தக்காளையைமீண்டும் கீழேஇறக்கினர்.
இந்தியாவில் இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை பதிவு செய்யப்பட்டது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் ஒரு காளை 60 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறியது. அந்தக் காளையை மீட்பது மிகவும் கடினமாக இருந்தது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்த காளையைபத்திரமாக கீழே இறக்க ஒரு கிரேன் தேவைப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களின் வீடியோக்களும் தற்போது ஆன்லைனில் பரவி, ஆச்சரித்தையும்வேடிக்கையையும்ஏற்படுத்தியுள்ளன. மேலும், இத்தகைய சூழ்நிலைகள் எப்படி நிகழ்கின்றன என்பது பற்றிய கவலைகளையும் ஒருசேர ஈர்த்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.