அட! திருட போன வீட்டுல பாய விரிச்சு தூங்கவா செய்றது?

author-image
WebDesk
New Update
அட! திருட போன வீட்டுல பாய விரிச்சு தூங்கவா செய்றது?

Thai burglar falls asleep while robbing, woken up by cops : கட்டாயமோ, சந்தர்ப்பமோ அடுத்தவங்க பொருள திருடுறதுக்கு ஒரு தில்லு வேணும் தான். அதுவும் போலீஸ்காரங்க வீட்டுல போய் திருடுறதுக்கு?! இங்க இல்லைங்க, தாய்லாந்துல. காவல்துறையினர் ஒருவர் வீட்டில் திருடச் சென்ற இளைஞர், உடல் களைப்பில் அங்கே இருக்கும் படுக்கையிலேயே படுத்து தூங்கிவிட்டார்.

Advertisment

சோகம் என்னவென்றால் காவல்துறையினர் வந்து அவரை எழுப்பி அழைத்து செல்ல நேர்ந்தது தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தைகர் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க அதிக் கின் குந்துட் என்பவர், கையில் இருக்கும் “டூல்கிட்டை” பயன்படுத்தி திருட சென்றுள்ளார். பெத்சபுன் பகுதியில் திருட சென்ற அவர், காவல்துறையினர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். திருட வந்ததை மறந்துவிட்டு, காவல் அதிகாரி வீட்டில் இருக்கும் அறை ஒன்றில் ஏசியை போட்டுவிட்டு அசந்து தூங்கிவிட்டார்.

Advertisment
Advertisements

காலை வெகுநேரம் ஆன பிறகும், பக்கத்து அறையில் இருந்து ஏசி ஓடும் சத்தம் கேட்கிறதே என்று அங்கே சென்ற காவல்துறைக்கு இவர் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Trending Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: